பக்கம் எண் :

94மெய்ப்பாட்டியல்

6. அன்னாய் வாழி. நான் சொல்வதை விரும்பு. அன்னையாகிய நின்மகள் பாலுமுண்ணுகின்றிலள். துன்பங்கொண்டு மிகவும் நிறம் வேறுபட்டாள், என்று வினாவுகின்றாய்.

(அகம். 48)

7. இப்பொழுது உண்ணுதலுஞ் செய்யேன்; வாழுதலுஞ் செய்யேன்.

(கலி. 23)

8. கன்றுமுண்ணாமலும் கறக்கும் பாத்திரத்தினும் பொருந்தாதும் நல்ல பசுவின் பால் நிலத்திலே சொரிந்து பயனின்றிக் கழிந்தது போல் என்றலைவற்கும் பயன்படாமலும் எனக்கு மாகாமலும் தேமல் பரந்த அல்குலையுடைய மாந்தளிர்போலும் நிறம் பசலை பரத்தல்வேண்டும். (குறுந். 27)

9. இனிய பாலையூட்டினும் அதனை வேம்பினுங் கைத்து வெறுப்பாள். நீ வாராதொழிவாயாயினும் உன்வருகையை விருப்போடு நோக்குவாள். எந்தலைவி நின்னினுஞ் சிறந்ததொன்றிலள். எனது சொல்லினும். அமைகின்றிலள் - இதனைப்படுதலெப்படி?

(இலக். பக். 537)

10. வளைநிலை நெகிழ மெலிந்து என தோள்கள் அவர் கொடுமையைக் கூறியவாயினும், தோழீ! கொடுமையோ நல்வரை நாடன்கண் இல்லை. அவர் என் நெஞ்சிற் பிரிந்ததுமிலர்; யாம் மெலிய எமது நோக்கத்திருத்தலை நீக்கியதுமிலர்.

(இல. ப. 466)

11. தோழியே! முற்றிய கதிரையுடைய தினைப்புனத்தின் ஒருபக்கத்தில் நின்றோனாகிய பரந்த தாரையணிந்த மார்பனைக் கண்டோர் பலர்தில். அவருள் அரிய இருட் கங்குலிலே படுக்கையொடு பொருந்தி நீர்வடியுங் கண்ணோடு நெகிழ்ந்த தோளையு முடையேன் யானொருத்தியேயாகுதல் என்னையோ!

(அகம். 82)

12. நின்னைப் பிரிந்தவிடத்து வருந்தி உயிர்வாழேனென்று கூறினவனைப் பிடித்துக்கொண்டு நீகொண்ட என்நலத்தை இனித் தாராயென்று வளைத்துக்கொள்வேன்போலவும், அவ்விடத்தே என்னுடைய கழிந்த அழகை யான் பெறும்படி புல்லிக் கூடி இனி வருந்தாதேகொள் என்று என்னையும் அளிப்பான் போலவும் (கனவிற் கண்டேன்.).

(கலி. 128)

13. ஐய நின் மார்பினிடத்து நீ விரும்பாத முயக்கம் கனவின்கண் வரப்பெற்ற செல்வத்தனையதொன்றாயிருக்கும். (பயனில்லை என்றபடி)

(கலி. 68)

14. தான் சூளுற்ற சூளுறவினைப் பாதுகாத்தவனாய்ப் பொய்த்தவனுடைய மலையாயிருந்தும் மழைபெய்தலால் விளங்