கும் அருவியையுடைத்தாயிரா நின்றது. (இஃது என்ன வியப்போ) (கலி. 41) 15. தலைவர் வருவேமென்ற நாளும் பொய்த்தன; வரி பொருந்தியமையுண்ட கண்களில் நீரும் நிற்கின்றில. (அக. 144) 16. கழங் காடலை ஆடும் நம்மாயத்தார் நடுவே அன்று நமக்கு அருளிய பழங்கண்ணோட்டம் தன்னைவருத்தலால், செய்த தன்மணத்தைச் சிறிது தவிர்ந்தானல்லனோ. (அகம். 66) 17. ஒரு தூதாயினும் அவர் வரவிடாராய்த் துறப்பாரோ? துறவாரோ கூறாய். குயிலும் நோவுதரும்படியாகக் கூவும். குயில் கூவும் என்றதனால் அவர் குறித்த வேனில் வந்ததெனக் குறிப்பித்தாள். 18. தலைவன் பரத்தையர் ஊரினிடத்தான்போலும். அவனைத் தேரும் பாணன் நந்தெருவின்கண் நிற்கின்றான். (இல. ப. 537) 19. தலைவர் நாட்டு மலையிலே நேற்று மாலையிற் பெய்த வெள்ளத்தாரையாலாகிய மணங்கமழாநின்ற ஆற்றோடு இன்று வைகறையில் வந்த காந்தளின் முழுக் கொடியை மெல்லிய இலைகள் குழையத் தழுவலையும் இல்லிற்கொணர்ந்து நடுதலையும் நீக்காதாள்மாட்டு. (குறுந். 361) 20. பக்கத்தே பல்லி சொல்லுந்தோறும் கடவுளை வணங்கி கன்றுகள் மன்றிற்புகும் மாலைக்காலத்தே நின்றோளையடைந்து, வணங்கி நின்றோளையெய்தி என்க. (அக. 9) 21. பழிநீங்கும் ஞாயிறே! உலகியலறியாதாரிடத்துக் கழியச் சீறுதற்கு விரைந்து செல்வையென்று (என் வருத்தங் கண்டார்) கூறக்கேட்டு நின்னை வழிபட்டு நீ அவரைமிகச் சீறாத படி இரந்துகொள்வேனாக வந்தேன். நீ என்னெஞ்சங் கெடும் படி என்னைக் கைவிட்டவனைக் கண்டு சீறும்பொழுது என்னை நீங்கவிடாதே கொள் என்று. (கலி. 143) 22. பெருங்கல்லின் நெருக்கத்தால் எய்த அம்பு ஓடாத அரிய வழியிடத்துப் பெருமையையுடைய கழுத்தினையும் அழகையுமுடைய ஏற்றின்பின் நீங்காமற்றிரியும் பிணையையும் காணாதிருக்கின்றீரோ! அவை நீர் அறியப் பிரியாவே! (ஆதலால் எம்மையும் உடன்கொண்டு சென்மின்.) (கலி. 20) 23. ஐயனே! விருப்பம் மருவுகின்ற அழகினையுடையாய்! அத்தா! அத்தா!! என்று கூறும் நினது இனிய மொழியைக் கேட்டு மகிழ்ந்திருத்தல் இனிது. அஃதொழிந்து நுந்தையால் நலனுண்ணப்பட்டு மெலிந்து நின்றவரது எவ்வநோய் காணுங்கால் அஃது இன்னாது. (கலி. 80) |