பக்கம் எண் :

98மெய்ப்பாட்டியல்

7. தன் மலையின்கணுள்ள சந்தன நாறும் மார்பன், மழைக்கண் நனைந்த யானைபோல வந்துநின்றான். என்ன காரியம் மேற் கொண்டு வந்தானோ?

(குறுந். 161)

8. அவள் அங்ஙனமான இடத்து அவள் பூப்போலுங்கண் பாடின்மையைநீவிப் படுதற்கும் யானஞ்சுவேன்; அதற்குக் காரணமென்னெனில் அத்துயிலிடை நினைத்து வருந்தத்தக்க கனவாற் பின்னர்த்தாங்கிய அரிய வருத்தத்தால் உற்ற கேட்டைத் தூக்கிப்பார்க்கில் அஃது எல்லையறியவொண்ணாத மலையினும் பெரிதாயிராநின்றது. இனி இவ்வருத்தம் உறாதபடி நீ வரையாமற் பிரியப்பட்டாளோடு கொண்ட உறவு பின்னுதலைக் கொடுத்தல்வேண்டும்.

(கலி. 48)

9. தலைவரை நினைப்பின் மனம் வேகும். அங்ஙனம் நினையா திருப்பேமாயின் அவ்விருத்தல் எம்மளவின் அடங்குந் தன்மையதன்று. காமநோயோ எம்மைவருத்தி வானத்தைத் தோய்வதுபோன்ற பெருக்கத்தையுடையது. எம்மால் மருவப்பட்ட அத்தலைவர் சான்றோரல்லர்.

(குறுந். 102)

10. யான் அவளை வருத்துந் தன்மையனென்பதை யறிவேன்; தான் என்னை வருத்துந் தன்மையளென்பதை அவள் அறியாள். தான் எத்தன்மையள் ஆவளோ? பெரிய முதிய செல்வத்தை உடையோரது ஒப்பற்ற மடைமையயுடைய மகள்.

(குறுந். 337)

272-ம் சூத்திரம்

1. காதலர் செல்லும் அரிய வழியிடத்தில்சினைக்கொம்புகள் வாடும்படியாகச் சிறக்கும் நின் சினந்தணிவதாக என்று பரவிச் செறிந்த கதிரையுடைய ஞாயிற்றை யாம் வேண்டிக் கோடலும் நங்கற்பிற்கு இயைவதொரு காரியமோ? அல்லவே.

(கலி. 16)

2. தன் பொய்ச்சூளுக்கு நாம் அஞ்சும் அச்சமே தான் ஊடலுணர்த்தும் வழியாக என்புலவியை உணர்த்த வருபவனது பொய்ச்சூளுக்கு அஞ்சி யான் ஊடேனாயிருப்பேன்.

(கலி. 75)

3. விரிந்த தலையாட்டத்தையுடைய மனச் செருக்குற்ற குதிரைபூண்ட தேரில் ஏற்றிக்கொண்டுவந்த விருந்தினரை ஏற்றுக் கோடலால் ஊடலை மறந்திருப்பேன் என்றும்.

(கலி. 75)

4. நல்ல தாரையணிந்த மார்பிற்கு ஓர் சார்பாகப் பொருந்திய நெடிய கரிய கூந்தலையுடைய கடவுளரெல்லாருக்கும் முட்டுப்பாடு ஆகுதலும் உண்டு.

(கலி. 93)

நச்சினார்க்கினியர் மார்பிற்கும் கடவுளர்க்கும் முட்டுப்பாடாகுதலும் உண்டு என்பதைத் தனித்தனி கூட்டியுரைப்பர்.