முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 111 |
Untitled Document
703 | | கள்ள ரக்கா! குலத்தொடு நீ கப்ப லேறத் தாமதம் ஏன்? வள்ளல் எங்கள் காந்திமகான் வாக்கு முற்றும் பலித்ததினி; எள்ளத் தனையும் உன்வாழ்வுக்கு இடமிங் கில்லை, இல்லையடா! தெள்ளத் தெளியச் சொன்னேன் நான் தெரிந்து ஒழிந்து தொலைந்திடுவாய். |
704 | | பாவையரே! என்றன் பாங்கியரே! - கும்மி பாடி விளையாடும் தோழியரே! ஆவ ரெலாடக்க வாழ்வை அடைவதற்கு ஆகும் வழிகளைத் தேடுவீரே. |
705 | | உள்ளம் உடலையே பற்றிநிற்கும் - இந்த உண்மை மறந்திடலா காதம்மா தெள்ளத் தெளிந்த அறிவுடைய யோர்மொழி தெய்வ மொழியென் றுணர்வாயம்மா |
706 | | மாசொ டறியாமை நேசமாகித் - தம்முள் வாய்த்த மணஞ்செயும் காரணத்தால் பேசும் உலகினில் நோய்கள் எனும்பல பிள்ளைகள் வந்து பிறக்கு தம்மா. |
707 | | சுத்தமே என்றும் சுகம் அளிக்கும் - தீய சோம்பலை ஒட்டித் துரத்தும், அம்மா! இத்தரை வாழ்வைப் பெருக்கும், அம்மா! - அதற்கு ஈடேதும் இல்லையான் சொன்னேன், அம்மா! |
708 | | ஏதும் அழுக்கிலா ஆகாயமே - உடற்கு என்றும் உறுதி பயக்கும், அம்மா! மோது கடற்கரை சென்றுலவி - உண்மை முற்றும் தெளிவுறக் காண்பாய், அம்மா! | |
|
|