Untitled Document
709 | | நித்தமும் ஈசன் திருமுடியில் - கங்கை நீரைச் சுமந்து திரிவன் என்றால், சுத்த ஜலத்தின் பெருமை யெல்லாம் எவர் சொல்லி முடிக்கவும் வல்லார்? அம்மா? |
710 | | கந்தையானாலும் கசக்கியுடு - என்னும் கற்பனை போற்றி நடப்பாய், அம்மா! சுந்தர மேனியுண் டாகும், அம்மா! - இந்தச் சுத்தத்தின் நன்மை சிறிதோ? அம்மா! |
711 | | மட்டுக்கு, மிஞ்சிடில், வானமுதும் - குணம் மாறி விடமாகிப் போகம், அம்மா! இட்டமுள்ள தோழித் தங்கமே! - நீ இதை என்றும் மறவா திருப்பாய், அம்மா! |
712 | | சுண்டப் பசித்துண்ணும் வேளையிலே - பழஞ் சோறும் சுவையமு தாகும், அம்மா! பண்டி நிறைந்த பின்உண் பவர்க்கு - நல்ல பாலும் கசப்பாகிப் போகும், அம்மா! |
713 | | வேலைசெய் யாதுசோம் பேறிகளாய் - நிதம் வீட்டி லிருப்பது ஆகா தம்மா! மூலையி லட்ட இரும்பு துரவேறி, மோசமாய்ப் போவதும் கண்டிலையோ? |
714 | | வேலைகள் செய்து உடல் வன்மைபெறின் - இந்த மேதினி முற்றும் நமதே, அம்மா! காலனையும் வென்றும் வாழ்வோம், அம்மா! - ஒரு காலும் தளர்ச்சியுண் டாகா தம்மா! |
715 | | நோய்கள் உடலை அணுகிடாமல் - ஆயுள் நூற்றினும் மேலாய் வளரும், அம்மா! தீய உணவை அகற்றும், அம்மா! - வேலை செய்திட நித்தம் பழகும், அம்மா! |
716 | | நித்தமும், நோயாளி யாகி, ஐயோ! - கட்டில் நீங்காது நீண்டு கிடப்பவர்க்கு எத்தனை செல்வம் இருந்திடினும் - அதில் யாதும் பயன்உண்டோ? சொல்லும், அம்மா! | |
|
|