முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 113 |
Untitled Document
717 | | மன்னுயிர்க் காக உழைத்து நிதம் - சுக வாழ்வை அளிக்க முயலு வோர்தம் பொன்னுரை போற்றி ஒழுகுவமேல் - நாமும் பூரண வாழ்வைப் பெறுவோம், அம்மா! |
718 | | நாடும் சுகாதாரச் சங்கம் என்றும் - இந்த நானிலத் தோங்கித் தழைக்குகவே; ஆடி விளையாடும் தோழியரும் - நீண்ட ஆயுளைப் பெற்று வளர்குகவே! |
| | 92. யுத்தக் கொடுமைகள் | 719 | | மேலே நாட்டில் எங்கோ - மூண்ட வெந்தழல் இன்றெழுந்து ஞாலம் முழுவதுமே - பற்றி நாவிட் டெரியுதையோ! |
720 | | நாலு திசையும் சண்டை - கடலின் நடுவில் எங்கு சண்டை; மூலபலச் சண்டை - இதுதான் முடியும் நாள் எதுவோ? |
721 | | விண்ணிடி போல விழும் - குண்டுகள் வீழ்ந்து பொசுக்கிடாமல். மண்ணுக்குள் நண்டுகள்போல் - மனிதர் மறைவ தெளிதோ? ஐயா! |
722 | | சிங்கபுரம் போச்சு - பர்மா தேசமும் பாழாச்சு; தங்கிடம் காணாமல் - மக்கள் தத்தளிக்கின்றார், ஐயோ, |
723 | | போரில் எழுந்த பஞ்சம் - பாரத பூமியைத் தாக்குதையோ! நேருங் கொடுமையெல்லாம் - நினைக்க நெஞ்சு துடிக்குதையோ! |
724 | | குடிக்கக் கூழுமில்லை - அடுப்பைக் கோழி கிண்டுதையா! இடுப்புத் துணிக்குநான் - படும்பாடு யாவர் அறிவார்? ஐயா! | |
|
|