Untitled Document
725 | | எண்ணெய் கிடையாமல் - வீடும் இருளடையு தையா! தண்ணீர் விளக்கெரிக்கும் - தெய்வ சக்தி எமக்கும் உண்டோ? |
726 | | குழந்தை பசித்தழுதால் - தாயும் கூட அழுவதல்லால், எழுந்த பசியாற்ற - வீட்டில் எப்பொருள் உண்டு? ஐயா! |
727 | | ஆழி கடந்துவந்த - ரெங்கூன் அரிசிச் சரக்கை நம்பி வாழலாம் என்றிருந்தோம் - இன்று வயிறு காய்ந்துநின்றோம். |
728 | | சீனத்துப் பட்டெங்கே - உயர்ந்த சீமைத் துணிகள் எங்கே? மானத்தைக் காக்க இந்நாள் - எந்த மல்பீஸைக் கண்டோம், ஐயா? |
729 | | பேச வலியும்இல்லை - கொண்ட பிணிக்கு மருந்தும் இல்லை; காசெதும் கையில்இல்லை - கேட்டால் கடன்தரு வாரும்இல்லை! |
730 | | தேசத் தலைவரெல்லாம் - இன்று சிறையில் வாடுகின்றார்; நாசக் களரியாகி - நாடு நடு நடுங்குதையா! |
731 | | என்ன செய்திடுவோம்? - தெய்வமே எவ்விடம் போய்ப் பிழைப்போம்? உன்னருள் அல்லாமல் - எமக்கிங்கு உதவி வேறும் உண்டோ? |
732 | | பண்டம் மலியவேண்டும் - எங்கும் பயிர் செழிக்க வேண்டும் சண்டைகள் ஓயவேண்டும் - எவரும் சகோதரர் ஆகவேண்டும். | |
|
|