பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு115

Untitled Document
733 குடியரசு வேண்டும் - சுதந்திரக்
     கொடி பறக்கவேண்டும்;
அடிமை வாழ்வும் இனி - உலகில்
     அற வொழியவேண்டும்.

734 இந்த வரங்களெல்லாம் - ஈசா
     இரங்கி அளித்திடுவாய்;
சந்ததம் உன்பதமே - போற்றித்
     தலை வணங்குகின்றேன்.

93. புதிய ருஷ்யா

735 யாதுமென் ஊரே எவருமென் கேளிரே
பூதலம் யார்க்கும் பொதுவேயென் - ஓதியநற்
போதனையை முற்றும் புதியருஷ்யமக்கள்
சாதனையில் கொண்டார் தமக்கு.

94. உலகசாமாதானம்

736 மாதவம் செய்து பெற்ற
     மந்திர வாளைக் கொண்டு
வேதனை மிகுந்தி டத்தன்
     மெய்யினை அரிவதொக்கும்
கோதிலாச் சுதந்தி ரத்தால்
     குணம் பெறா தென்றும் நாட்டில்
வாதினைப் பெருக்கிச் சண்டை
     வளர்ப்பவர் செய்கை அம்மா.

95. சர்வாதிகாரி

737 தேடித் தேடி இரைகிடை யாதொரு
     சிங்க வேறு முழங்கும் முழக்கினில்
பாடும் இன்னிசை கேட்டிடலாம்; அதன்
     பார்வை தன்னில் இரக்கமும் பார்க்கலாம்!
வாட வாயில் வயிற்றில் அடித்தெமை
     வானின் மின்களை எண்ணிட வைத்தவன்
நீடு வஞ்சகன் செய்த கொடுமைஇந்
     நெஞ்சில் ஆறுதல் காண்ப தரிதரோ.