Untitled Document
889 | | ஏழை அழுத கண்ணீர் துடைக்கும்கொடி - அவன் இதயம் குளிரஇன்பம் பொழியும்கொடி; ஊழையும் உப்பக்கம் காணும்கொடி - நித்தம் உழைத்துமுன் னேறநம்மை ஊக்கும்கொடி. |
890 | | ராட்டின மல்லாது வேறுபடை - இந்த நாட்டினுக் கில்லையென்று நாட்டும்கொடி; ஈட்டிவாள் குந்தங்கள் பீரங்கிகள் - இருந் திருந்து துருவேறச் செய்யும்கொடி. |
891 | | ஊக்கத்தை உள்ளத்தில் ஊட்டும்கொடி - தேச ஊழியம் செய்திடத்தூண்டும் கொடி; ஆக்கமெலாந் தேடிச் சேர்க்கும்கொடி - நம்மை ஆண்சிங்க மாகவே ஆக்கும்கொடி. |
892 | | நாடு நமதாகக் கண்டகொடி - அதை நாமே அரசாள வைத்தகொடி, வீடு நமதென்று வீரம்பேசி - இன்று வெற்றி முரசறையச் செய்த கொடி. |
893 | | ஒட்டுக் குடிசையின்மீ தாடும்கொடி - உயர்ந்து ஓங்கிய மேடையின்மீ தேறும்கொடி; சட்ட சபைகளிலே தழையும்கொடி - அங்கே தங்கும் பெரியோர்மேல் படரும் கொடி. |
894 | | மானம் உருவாக வந்தகொடி - இதை மாசுறச் செய்வதும் பாவம், பாவம்; ஊனில் உயிருள்ள காலமெல்லாம் - மிக ஊக்கமாய் நின்றுநாம் காத்திடுவோம். |
895 | | காரிருளும் நீங்குகவே! காந்திமதி நிலவுகவே! பாரில் அறம் பெருகுகவே பயிர்களெல்லாம் செழித்திடவே! | |
|
|