பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு137

Untitled Document
110. காங்கிரஸ் கப்பல்
896 இமய மலைமுதல் குமரிவரை - வாழும்
     யாவரும் யாத்திரை செய்யும்கப்பல்;
சமயக்கடல் சாதிக் கடல்களெல்லாம் - சற்றும்
     சாய்ந்து சரியாது நீந்தும் கப்பல்,
897 பொறுமையாம் நங்கூரம் தாங்கும்கப்பல் - தேசப்
     பொதுநலம் சுக்கானாய் ஓங்கும்கப்பல்;
வறுமை யறநீக்கி வெல்லும் கப்பல் - நல்ல
     வாய்மையாம் பாய்கட்டிச் செல்லும் கப்பல்.

898 ஆண்டுகள் ஐம்பது கண்டகப்பல் - புயல்
     ஆயிரத் துக்கீடு நின்றகப்பல்;
வேண்டும் வளந்தேடிச் சேர்க்கும் கப்பல் - என்றும்
     வெற்றித் திரைநேரே நோக்கும் கப்பல்.

899 வீரர் திலகர்கள் செய்தகப்பல் - நெஞ்சில்
     விளைந்த வயிரத்தால் ஆன கப்பல்;
பாரத மாதா பாராட்டும்கப்பல் - இன்று
     பாபுரா ஜேந்திரர் ஓட்டுங்கப்பல்.

900 தீமை கடலெல்லாம் தாண்ட வேண்டும் - எல்லாத்
     தெய்வங்களும் கூடிக் காக்கவேண்டும்;
சேமத் துறைசென்று சேரவேண்டும் - அங்கே
     செயக்கொடி கட்டித் திகழவேண்டும்.

111. சுதந்திரம்
901 பக்தியொடு தெய்வம் பணிந்திடுவோம், பாரதத் தாய்
சித்தங் களிப்படையச் செய்திடுவோம் - ஒத்துழைத்துப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிடுவோம், பேருலகில்
நற்றவம் ஈதால் நமக்கு.

வேறு
902 மாதவம் செய்து பெற்ற
     மந்திர வாளைக் கொண்டு
வேதனை மிகுந்திடத் தன்
     மெய்யினை அரிவ தொக்கும்,