பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு145

Untitled Document
940 ஊனுண்டு பாய்புலியும் கடுவாயும் உண்டு;
     உறுமியெதிர்ந் தோடிவரும் பன்றிகளும் உண்டு;
மான் உண்டு; வன்கரடி மதயானை உண்டு;
     மாவேட்டை நீயாட வனம் உண்டு பலவே.

941 படியேந்தி நிதியளக்கும் பட்டினங்கள் பலவாம்;
     பணிசிறந்த திருக்கோயில் பள்ளிகளும் பலவாம்
கொடியேந்தி விண்ணளக்குங் கோபுரங்கள் பலவாம்;
     குவலயமெ லாம்புகழும் கோரிகளும் பலவாம்;

942 சாதிகளும் பலவாகும்; சமயங்கள் பலவாம்;
     சாத்திரங்கள் பலவாகும்; தருமங்கள் பலவாம்;
ஓதுமொழி பலவாகும்; உணவுடைகள் பலவாம்;
     உலகமிசை இதுபோலும் ஒருதேசம் உளதோ?

943 இப்பெரிய எம்நாட்டின் நலம்யாவும் எளியேம்
     எடுத்தோதுந் திறமின்றி விடுத்தோம் இங்கு,
ஒப்பரிய அரசகுலத் துதித்த இளங்கோவே! ஐய!
     உன் அடிக்கு வந்தனங்கள் உவந்தளித்தோம் பலவே.

944 கம்பன் அன்றி எவரேஇக் கண்காட்சி யாவும்
     கவியாலே இனிமையுறக் காட்டவல்லர், ஐய!
அன்புவியெ லாம்புகழும் அரசகுல விளக்கே!
     அறியர்இச் சிறுமொழியும் அன்புடன் எற்றருளே!

945 வாழி! வேல்ஸிள மன்னவன் வாழியே!
வாழி! நல்லறம் மாண்புடன் வாழியே!
வாழி! பாரதத் தாய்நிதம் வாழியே!
வாழி! செந்தமிழ் மாமொழி வாழியே!

118. திருமூல மன்னர்
946 பாட்டில் அமைப்பர் படிய மனங்கொள்வர்
ஏட்டில் அழகாய் எழுதிவைப்பர் - வாட்டந்தீர்த்து
அன்பு கனியஎமை ஆளுந் திருமூல
மன் புகழைக் கேட்டு மகிழ்ந்து.