பக்கம் எண் :

146கவிமணியின் கவிதைகள்

Untitled Document
947 மன்னும் மதிபோல் வயங்குமே, வஞ்சியதைப்
பொன்னுலக மாக்கிப் புகழ்பெறுமே - முன்னமொரு
சீதைக் கணைகண்ட செம்மல் தலைகுனியக்
கோதைக் கணைகண்ட கோ.

948 எண்ணுந் திருவருளால் இம்மூல மன்னவற்கு
நண்ணும் புகழெல்லாம் நம்புகழே - மண்ணின்று
தாளுண்ட நீரைத் தழைபூவும் காயும்உணா
நாள் உண்டோ? கோதாய்! நவில்.

949 மாவேறு மந்தி வருக்கைச் சுளையமுதம்
நாவேற உண்ணுமலை நாடாள்வான் - பாவேறு
செந்தமிழான் வெண்குடையான் செங்கோலான் இவ்வுலகில்
சந்ததமும் வாழ்க தழைத்து

950 பூமகளைக் காத்துப் புகழ்மகளைப் போற்றிநிதம்
நாமகளை வஞ்சிநல் நாட்டிருத்தித் - தாமமணி
வண்ணன் அடி என்றும் மனங்கொண்டு மாமூல
அண்ணல் இனிதாள்க அரசு!

951 வஞ்சித் திருமூல மன்னவற்குப் பன்னலமும்
விஞ்சித் திருவளை வேண்டுதுமே - பொன்செய்
குளம்பெருக்கி வாழும் குடிக்குப் பயிர்கள்
வளம்பெருக்கும் என்று மதித்தது.

952 கண்ணுக் கினியன் கவிக்கினியன் வாய்க்கினியன்
பண்ணுக் கினியன் அருள் பற்றுமினோ - நண்ணு புகழ்
வஞ்சி மகிழ்நன் வரும்திருநாட் கோலமிது
நெஞ்சுக் கமுதளிக்கும் நேர்.

953 என்றம் தழைத்திடுக! இன்தமிழ்ப்பா வேய்ந்திடுக!
நின்றிந் நிலத்தில் நிலவிடுக! - துன்றுசுவைப்
பாவடிகள் தேன்வடியப் பாடும் புலமை இளங்
கோவடிகள் போந்த குலம்.