முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 147 |
Untitled Document
954 | | பொன்னேஇப் புவியதனைப் புரக்கவந்து கொலுவிருக்கும் பொலிவு தானோ? தன்னேரி லாஅழகு தனியரசு செலுத்தவரும் தகைமை தானோ? அன்னேயென் றேஅலறும் அகிலமுறைகேட்க எழும் அன்பு தானோ? என்னேயான் சொலத்துணிவேன் எமையாளும் மகாராணி இருந்த வாறே! |
955 | | நீதியால் உலகாளும் நெறிமன்னர் நாண, உயர் நேர்மை கொண்டாள்; தீதிலா தொருதுறையில் பசுவோடு புலியுண்ணச் செங்கோல் பூண்டாள்; கோதிலாத் தருமங்கள் குணங்கண்டு பாலிக்கும் கொள்கை மிக்காள்; சேதுபாய் மகாராணி அரசாள என்னதவம் செய்தோம்! அம்மா! |
956 | | தஞ்சமென நின்றுதொழும் தம்குடிகள் குறையெல்லாம் தாமே கண்டு, நெஞ்சமர யோசித்து நெல்வரியைப் பணமாக்கி நியாயம் செய்தாள்; அஞ்சலென நொந்தவரை ஆதரவு செய்வதிலிவ் அன்னைக்கு ஈடு வஞ்சிநிலத் தில்லையெனில் மற்றெந்த நிலம்காட்ட வல்லது? அம்மா! |
957 | | வாய்பேச இயலாத பிராணிகளும் வஞ்சியிதில் வளர்ந்து வாழத் தாய்போலும் தயையுடையாய்! உயிர்ப்பலிசெய் கொடுமைகளைத் தவிரச் செய்தாய்; பாய்திரைசூழ் உலகாளும் மன்னரெல்லாம் பார்த்தறங்கள் படிக்கும் வண்ணம் சேய்நிலத்தும் இந்நிலம்போல் நின்பெருமை எந்நாளும் சிறக்க மாதோ! | |
|
|