| | கண்ணிகள் |
959 | | வஞ்சிதேசம் எங்கும்புது மணம் வீசும் பூவாம், மணம்வீசும் பூ அழகை வகுத்துரைக்க லாமோ! பார்வதிபாய் மகாராணி பக்கம்வளர் கிளியாம், பக்கம்வளர் கிளிக்கினிய பழங்கள் கொண்டு போவோம். |
960 | | முடிவேந்தர் மடியிருந்த முத்தமிடும் முத்தாம், முத்தமிடும் முத்தின்விலை மூவுலகில் உண்டோ! |
961 | | திருமூல மகிபருக்குத் தினம்இனிக்கும் அமுதாம். தினம்இனிக்கும் அமுதின்விலை செப்பவலார் உண்டோ! |
962 | | வஞ்சிராஜ குலம்தழைத்து வந்தபசுங் கொழுந்தாம், வந்தபசுங் கொழுந்தோங்கி வளர்ந்தது நிழல் தருமே! |
963 | | மூலமன்னர் செய்தருமம் முற்றிவந்த கனியாம், முற்றிவந்த கனிநமக்கு முழுதும் இன்பம் தருமே! |
964 | | அன்புநீரை அடைத்துநாங்கள் அகம்வளர்க்கும் பயிராம், அகம் வளர்க்கும் பயிருமெங்கட் களிக்கும் நல்ல பலனே! |
965 | | குடிகளுக்கு க்ஷேமமெல்லாம் கொண்டுவரும் கலமாம், கொண்டுவரும் கலத்திற்கிணை குவலயத்தி லண்டோ! |
966 | | சித்திரைநாள் அவதரித்த சேரஇளங் கோவாம், சேரஇளங் கோவினுக்குச் செகதீசன் துணையே! |