முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 149 |
Untitled Document
968 | | பன்னாடுஞ் சுற்றிப் பழகியங் கங்குள்ள நன்னாக ரீகமெலாம் நன்குணர்ந்து - தென்னாடு காக்கவரும் சேரகுல காவலன்சீர் செந்தமிழின் பாக்கமழ நாவேநீ பாடு. |
969 | | ஆயிரத்து நூற்றேழில் ஐப்பசிநா லைந்தனில் தூயவெள்ளி சேரும் சுபதினமே - மேயதிரு மூலமன் பூண்ட முடிபூண்டு சித்திரைமன் ஞாலம் புரக்கவந்த நாள். |
970 | | சீர்பெருகும் மாதேவி சேதுலக்ஷ்மி பாய்மகிழத் தார்மௌலி சித்திரைமன் தாங்கினான் - பாரதினில் தாயின் சுமைவாங்கித் தான்சுமந்து கொள்ளுவது சேயின் கடமையெனத் தேர்ந்து. |
971 | | திருமால் அருளோ? திருமூல மன்செய் அருமா தவமோ? அறியேன் - உருவாகி மாமகுடம் சூடி வளரும்செங் கோல் ஏந்திப் பூமகிழப் போந்ததிப் போது. |
972 | | சித்திரைநாள் வந்த திருமன்னன் மாமகுடம் அத்தன் அருளால் அணிந்த அந்நாளே - ஒத்த வஞ்சி மாதைமணந் தான்கோடி மக்களையும் பெற்றினிய தாதையெனப் பேருமெடுத் தான். |
973 | | மன்னர் பெருமான் வடிவழகன் சித்திரைமன் பன்னு கலைதேர்ந்த பண்டிதன் - உன்னும் கருணையொடு நீதியிரு கண்ணாக வஞ்சி இருநிலம் காக்க இனிது. |
974 | | நாட்டின் நலமே நமதுநலம் என்றுள்ளந் தீட்டும் பெருமான் எம் சித்திரைமன் - கூட்டும் குடியரசின் மன்னவர்செங் கோலரசை மெச்சும் படியரசு செய்க பரிந்து. |
975 | | திருவஞ்சி நாடாளச் சித்திரைநாள் வந்த பெருமாளை எந்நாளும் பேணி - மருவும் நடுநீதி காக்கும், அவன் நற்கருணை காக்கும், நெடுமால் அருள்காக்கும் நேர். | |
|
|