முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 199 |
Untitled Document 213. குன்றக்குடி அடிகளார் |
1220 | | சைவம் வளரத் தமிழ்வளரச் சலியா தென்றும் தொண்டாற்றி வையம் புகழ நல்லறங்கள் வளர்த்து நாட்டில் புலவர்களை மெய்யன் போடு பாராட்டும் மேலோன் அருணா சலவடிகள் ஐயன் குன்றக் குடிமுருகன் அருளால் வாழ்க! - வாழ்கவே! |
1221 | | இனிய தமிழில் சைவத்தை எவரும் அறிய எடுத்தோதி, கனியும் அன்பால் அறம்பேணிக் கற்றோர் போற்ற விளங்கிடுநம் புனிதன் அருணா சலவடிகள் புகழ்சேர் வாழ்க்கை வரலாறு நனியிவ் வுலகில் சிறந்தோங்கி நாளும் வாழ்க! வாழ்கவே! |
1222 | | சைவம் பரவத் தருமம் தழைத்துவரச் செய்ய தமிழும் சிறந்தோங்க - வையமிசை குன்றக் குடியெம் குருநாதன் தொண்டாற்றி என்றென்றும் வாழ்க இனிது. |
1223 | | மெய்யறிவே எத்திசையும் மேலோங்க, வீண் வாதப் பொய்யழிந்துபாதலம் புக்கொழியச் - செய்ய புகழ் ஐயனென் அண்ணல் அருணா சலவடிகள் வையமிசை வாழ்க மகிழ்ந்து. |
1224 | | செய்ய தமிழும் சிவநெறியும் சிறக்கத் தொண்டு புரிந்திடுவோன் ஐயன் குன்றக் குடிஅடிகள் அருணா சலதே சிகநாதன் | |
|
|