Untitled Document | | தையல் பாகன் தண்ணருளால் சமயச் செங்கோல் இனிதோச்சி வையம் புகழப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! வாழ்கவே! |
1225 | | யாவரும் போற்ற இராம கதையிதனை ஆவலோடு தேர்ந்தளித்த அன்புடையோன் - மேவு தமிழ் வித்தகச் செல்வனென் வீர முருகப்பன் நித்தமும் வாழ்க நிலைத்து |
215. திருவள்ளுவர் ஒருதுறைக் கோவை |
1226 | | உள்ளுவந்து போற்றி ஒருதுறைக் கோவைதிரு வள்ளுவர்மேல் அன்பால் வனைந்தளித்தான் - தெள்ளுதமிழ்ப் பண்பு மலிந்தொழுகப் பாடுமுத்து சாமிப்பேர் நண்பன் கவிமணியிந் நாள் |
1227 | | சேரர் பெருமான் செந்தமிழில் தேடி வைத்த பொருளை யெலாம் யாரும் எளிதில் பெற்றின்பம் எய்தப் புதுவைப் பாரதியார் தேரும் இனிய உரைநடையில் செய்த சிலம்புச் செல்வமிது பாரில் என்றும் நிலவிடவே பரமன் அருளுண் டாகுகவே. |
1228 | | பயன்தரு பனுவல் பற்பல கற்று நயந்தர உரைக்கும் நண்பனை யொத்தும் உலக வாழ்வின் உண்மையை உணர்த்தி இகபர சுகங்க ளிரண்டையுந் தரும்அவ் வழிகளை நன்கு வகுத்துக் காட்டும் | |
|
|