முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 201 |
Untitled Document | | குணந்திகழ் ஞான குரவனை யொத்தும், உற்றுழி யுதவும் 'யோக சித்தி' யாம் அப்பெரு நூலை, ஒப்பருந் தவத்தோர் உள்ளதை உள்ளவா றுணர்ந்த பெரியோர் சுத்தமெய்ஞ் ஞானச் சுடரெனப் பொலிவோர் அரிய பெரிய அறவோர் உறவால், முன்னை வழக்கம் முற்றுமா ராய்ந்து பின்னை வழக்கம் பிழையறத் தேர்ந்து, போக்குதற் குரியவை ஆக்கியும், அழகாய் இக்கா லத்துக் கிசைந்தநன் முறையில் கற்றவர் தமக்கும் கல்லா தவர்க்கும் எளிதில் விளங்கிட இனிய மொழியால் அந்த ணாளன், அருந்தவன், புதுவைச் சுத்தா னந்த சுவாமி அருளினன், அந்தமி லின்ப மடைந்திச் செந்தமிழ் நாடு சிறப்புற் றோங்கவே. |
1229 | | இடமும் பொருளும் ஏவலுமே எண்ணி எண்ணிப் புண்ணாவீர்; உடலின்உறுதி யுடையவர் இங்கு உலகம் முழுதும் உடையவராம்; திடமெய்ஞ் ஞானி இந்நூலில் செப்பும் முறைபின் பற்றுவிரேல், அடைதற் கரிய நலமெய்தி அமர ராக வாழ்வீரே. |
1230 | | தொண்டரெலாம் கண்டுதொழும் தொண்டனென் காந்திமகான் மண்டுபுகழ் வாழ்க்கை வரலாற்றைத் - தண்டமிழ் ஐயமறக் கற்ற அசலாம் பிகைசொன்னாள் செய்யுணயம் வாய்ப்பத் தெரிந்து. | |
|
|