Untitled Document
1256 | | உண்ணும் உணவுக்கு ஏங்காமல், உடுக்கும் ஆடைக்கு அலையாமல், பண்ணும் தொழில்கள் பல காண்போம்; பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்; அண்ணல் காந்தி வழிபற்றி அகிலம் புகழ வாழ்திடுவோம்; எண்ணும் அன்பர் உளம்தங்கும் இறைவா! துணைசெய் தருள்வாயே. |
1257 | | ஈரம் இரக்கம் இல்லாமல் இருநூ றாண்டு தளராமல், கோர ஆட்சி புரிந்தவரின் கொட்டம் அடங்கக் காந்திமகா வீரன் செய்த அறப்போரின் வெற்றி தந்த குடியரசு பார தத்தில் நீடுழி பல்கிப் பெருகி வாழ்கவே! |
1258 | | வெற்றி சிறந்த விரோதியினில் விளங்கு மகரம் பதின்மூன்றில் கற்ற பெரியோர் மதிவல்லோர் கண்ட நமது குடியரசு வற்றில் கங்கை காவேரி வளஞ் செய் பரத நாட்டினிலே சிற்றம் பலவன் திருவருளால் தினமும்வாழ்க வாழ்கவே! |
1259 | | விஞ்சுபுகழ் வெற்றிதரு விரோதி ஆண்டில் விளங்கிடு தை பதின்மூன்றில் வியாழ நாளில் நெஞ்சுவந்து பாரதத்தாய் பெற்ற மக்கள் நிறுவிய நற் குடியரசு நிலைத்து நித்தம் | |
|
|