முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 209 |
Untitled Document | | எஞ்சிலிலா எவ்வளமும் பெருகி இந்நாடு இமையவரின் திருநாடு ஒத்து இலங்கி வாழ பஞ்சவர்க்குத் துணைபுரிந்த பரந்தாமா! நின் பாதமலர் இணை போற்றிப் பணிகின் றோமே! |
1260 | | ஜாதி சமயவெறி தளரக் கலைவளர நீதி வளர அறம் நிலைத்த நிதிவளர ஆதி பகவனடிக் கன்பு வளரச் செய்த மாதவப் பயனென வாய்த்த குடியரசு |
1261 | | வெற்றி விளங்கும் விரோதிநல் லாண்டதனில் பற்றுதை மாதம் பதிமூன்றில் - பெற்றபுகழ் இந்திய நாட்டில் எழுந்த குடியரசு சந்ததம் வாழ்க தழைத்து. |
1262 | | வையகத்து நல்வாழ்வு வாழும் வழிகளெல்லாம் ஐயமறக் காட்டும் அருட் புலவன் - செய் தமிழ் பாக்கடலைத் தந்தமுதம் பாலித்த கம்பன்சீர் நாக்கமழப் பாடுவோம் நாம். |
1263 | | ஆரிய யத்தோ ரியதமிழ் ஆழம் கண்ட பேரறிஞன் தேரும் பிரமன் படைப்பையெலாம் திருத்தி யழகு செயவல்லோன் யாரும் புகழக் கவியுலகில் இராஜ ராஜன் எனத்திகழ்வோன் பாரில் எங்கள் கம்பனெனப் பாடிப் பாடி மகிழ்வோமே. |
1264 | | கங்கை பெருகி அலைமோதிக் கரைபு ரண்டு வருவதெனக் தங்கு தடையில் லாதொழுகும் தமிழின் னமுதம் ததும்பியெழப் பொங்கு புகழ்வோ ராமகதை புகன்ற கம்ப நாடன் சீர் எங்கும் பரவி யிவ்வுலகில் என்றும் வாழ்க வாழ்கவே | |
|
|