Untitled Document 234. பொங்கல் வாழ்த்துக்கள் |
1265 | | புயலும் பருவ மழைபொழிய பொருள்கள் எஞ்கும் விலைமலிய வயலிற் பயிர்கள் வாய்த்துவர மக்கள் உள்ளம் மகிழ்ச்சிபெற அயனும் அரியும் தேடுமரன் அருளை வேண்டும் தைப்பொங்கல் பயிலும் அன்பால் ஒருநால்வர் பாடும் கவிபோல் பொங்குகவே! |
1266 | | சாதி சமயம் பற்றிவரு சண்டை ஓய்ந்து மறைந்திடவே, நீதி யெங்கும் நிலவிடவே, நெஞ்சிற் கருணை நிறைந்திடவே, ஆதி இறைவன் ஆனந்தன் அருளை வேண்டும் தைப்பொங்கல் பூத லத்தில் காந்திமகான் புகழே போலப் பொங்குகவே! |
1267 | | வார வழக்கு வாராமல் வயலிற் பயிர்கள் செய்திடவே, ஈர நெஞ்சம் உடையவராய் எவரும் உலகில் வாழ்ந்திடவே, ஆரை அணியாய் அணிந்தபிரான் அருளை வேண்டும் தைப்பொங்கல் பாரில் பெரியோர் ஆசிதரும் பாக்கி யம்போல் பொங்குகவே! |
1268 | | நாடும் நகரும் சிறந்திடவே, நன்செய் புன்செய் செழித்திடவே, வீடும் குடியும் விளங்கிடவே, விற்கும் பொருள்கள் மலிந்திடவே. ஆடும் தில்லை யம்பலவன் அருளை வேண்டும் தைப்பொங்கல் பாடும் புலவர் நாவிலெழு பாக்கள் போலப் பொங்குகவே! | |
|
|