பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு211

Untitled Document
1269 சந்தக் கவிகள் சரிதங்கள்
     சாஸ்தி ரங்கள் பற்பலவும்
தந்து நித்தம் தமிழன்னை
     தளரா தோங்கி வளர்ந்திடவே,
அந்தி வண்ணன் உமைபங்கன்
     அருளை வேண்டும் தைப்பொங்கல்
புந்தி மகிழ்ந்து நல்லோர்செய்
     புண்ணி யம்போல் பொங்குகவே!

1270 மாரியெங்கும் பொழிந்திடவே,
     மணியத் தீர்வை ஒழிந்திடவே,
ஊரும் நாடும் சிறந்திடவே,
     உழவர் உள்ளம் குளிர்ந்திடவே,
ஆரும் பிறையும் அணிந்தபிரான்
     அருளை வேண்டும் தைப்பொங்கல்
தேரும் அன்பால் அறஞ்செய்தோர்
     செல்வம் போலப் பொங்குகவே!