பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு221

Untitled Document
253. திரு.வி.க.
1315 ஏழைத் தொழிலாளிக் கென்றும் துணைநின்று
வாழும் தமிழன் வளம்பெருக்கி - ஊழியங்கள்
செய்யப் பிறந்த திரு.வி,க. சென்றடைந்தான்
தையலொரு பாகனிரு தாள்.

254. பண்டிதமணி
1316 பத்தரெலாம் பாராட்டும் பண்டித மாமணிநீ
அத்தன் திருவடிக்கா ளாயினையோ! - நித்தமவர்
கற்றுக் களிக்கும் கதிர்மணி நல்விளக்கம்
முற்றப்பெறுவதன் முன்.

1317 வையமெலாம் போற்றுதிரு வாசகத்தின் மெய்ப்பொருளை
ஐயமறக்கண்டின் றடைந்தனையோ! -செய்யதமிழ்
மன்றத் தறிஞர் மணியாய் ஒளிவீசி
நின்ற கதிரேசா, நீ!

1318 என்று வருவான் எமனென் றெதிர்நோக்கி
நின்ற தளர்கின்றேன் நித்தமுமே - மன்றில்
நடங்கண்ட ஈசன் நடராஜன் பாதத்
திடங்கண்டு வைநீ எனக்கு.

1319 செநத்மிழ்ச் செல்வம் சிறந்து வளர்ந்துவரச்
சிந்தைமகிழ் பன்னூல்கள் செய்தளித்து - முந்துபுகழ்
பூண்ட கதிரேசப் புலவர் பெருமானை
யான்டுநாம் காண்போம் இனி!

1320 விஜய் வருஷம் விளங்குதுலா மாதம்
இசைய வருந்தேதி எட்டாம் - இசைவளர
அம்புவியில் வாழ்ந்த அறிஞன் கதிரேசன்
நம்பனடிக் காளான நாள்.

255. டி.கே.சி.
1321 மன்னும் விஜய வருஷத்தில் மாசியினில்
உன்னி வருந்தேதி ஓரைந்தாம் - இன்னமுத
சீலன் ரசிகமணி டி.கே.சி. நண்பனிந்த
ஞாலம் தனைநீத்த நாள்.