முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 29 |
Untitled Document
149 | | அரக்கர் நெஞ்சறி வான் - முனிவர் அகமும் கண்டறி வான்; குரங்கின் உள்ளறி வான் - வேடன் குணமும் நன்கறி வான். |
150 | | நாடகக் காட்சி யெல்லாம் - கவியில் நன்கு காட்டிடு வான்; பாடகர் போற்றிடவே - இனிய பண்கள் தந்திடு வான். |
151 | | மூவர் முடிவேந்தர் - போற்றும் முத்தமிழ்ப் பாவேந் தன், தேவி அருள்பெற்றான் - தமிழ்தாய் செய்தவத் தால்பிறத் தான். |
152 | | நன்று செய்தவள்ளல் - சடையன் நாமம் இப் புவியில் என்றும் நின்றிடவே - கவியில் இடம் அறிந்தளித் தோன். |
153 | | புவி யரசரெல்லாம் - நிதமும் புகழ்ந்து பாராட்டும் கவியரசர் தொழும் - பெரிய கம்ப நாடாள் வான். |
154 | | கம்பன் கவிவாழ்கர - இராம கதை நிதம் வாழ்க; அம்புவி மீதெங்கள் - அருமை அமுதத்தமிழ் வாழ்க! |
155 | | எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத் தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து - நித்தமும் அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்த கம்பன் கவியே கவி. |
156. | | உள்ளம் மகிழ உரைநா அமுதூறக் கொள்ளும்இருகாதும் குளிரவே - தெள்ளரிய | |
|
|