பக்கம் எண் :

30கவிமணியின் கவிதைகள்

Untitled Document
    செந்தமிழ்க் கம்பத் திருநாடன் செய்நூலுக்கு
எந்தநூ லாகும் இணை.

157.   பாரில் பெயரோங்கு பன்மொழிக்கும் நாணாது
நேரில் நிமிர்ந்து தமழ் நிற்பதுதான் - சீருயர்ந்து
ஏறுபுகழ்க் கம்பன்இராமகதை யால்வந்த
வீறுகொண் டென்று விளம்பு.

29. ஒளவை

158.   ஒளவைக் கிழவிநம் கிழவி,
     அமுதின் இனிய சொற்கிழவி,
செவ்வை நெறிகள் பற்பலவும்
     தெரியக் காட்டும் பழங்கிழவி.

159.   நெல்லிக் கனியைத் தின்றுலகில்
     நீடு வாழும் தமழ்க் கிழவி,
வெல்லற் கரிய மாந்தரெல்லாம்
     வியந்து போற்றும் ஒருகிழவி.

160.   கூழுக் காகக் கவிபாடும்
     கூனக் கிழவி; அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
     மறவோம் மறவோம் மறவோமே!

30. அமரகவி (பாரதி)

161. ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
     ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்,
     அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ் மக்கள் செய்த வத்தால்
     தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே,
     பாமாலை புனைந்தவதற்குச் சாத்து வோமே,