பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு301

Untitled Document
வேறு
1460 வெள்ளியில் அங்கி அணிந்துகொண்டு - கையில்
வெண்முத் தொளிரும் பரிசை யேந்தி
ஒள்ளணி வீரர் தொடர்ந்துவர - அங்கே
உம்பர்கோன் போகியாய் வந்து நின்றான்.
16
1461 நீலக் குதிரையின் மீதிலேறி - ஒளிர்
நீல மணிவட்டம் கையிலேந்தி
காலகும் பாண்டர் தொழுதுவர - எமன்
கஞ்சியை யாளாக வந்து நின்றான்.
17
1462 செக்கச் சிவந்த குதிரையேறி - உயர்
செம்மணிக் கேடகம் கையிலேந்தி,
பக்கத்தில் நாகர்கள் சூழவ ருணனும்
பள்ளிச் சிவிகையா ளாக வந்தான்.
18
1463 பொன்னிறமான குதிரையேறி - நல்ல
பொன்னிலே செய்த கிடுகுமேந்தி,
மன்னிய யக்ஷர்க ளோடுகு பேரனும்
வண்ணச் சிவிகையா ளாகவந்தான்.
19
வேறு
1464 ஆண்ட விருதுகள் யாவும் கரந்துலகு
ஐயுறா தங்குவந்தார் - அவர்
பூண்ட வடிவால் உடையால் அப்பல்லக்குப்
போகியர் தாமேயானார்.
20
1465 தேவர் இவரென யாவருங் கண்டு
தெளிந்திடா வாறுவந்து - திசைக்
காவலர் கூடிச் சிவிகையைத் தோளிலே
காவியெ டுத்தனவே.
21
1466 உம்பரும் அன்று மனிதராய் மாறி
உலாவிக் களித்துநின்றார் - என்றும்
அம்புவி வாழ இறைவனும் வந்தங்கு
அவதரித் தான் எனவே.
22