Untitled Document ஈதொரு சிறுநொய்; இந்நோய் நீங்கிடக் காதலைப் போலொரு கைகண்ட மருந்துஇம் மேதினி மீது வேறெதும் இல்லை. மைந்தன் உள்ளம் மங்கையர் மையலில் திளைத்து மூழ்கச் செய்திடல் வேண்டும்; அண்ணலே ! நின்மகன் அறியாச் சிறுவன்; மங்கையர் மதிமுக வனப்பின் தன்மையும் அவர் கருவிழி யாம்கூர்ங் கணையின் கடுமையும் அவர் அதரத் தூறும் அமுதின் இனிமையும் இந்நாள் வரையிலும் ஈதுஎன அறியான்; அதனால், மனதுக்கு இனிய மனைவிய ரோடு தோழி தோழியர் சூழ்ந்திட அவனை வாழ வைப்பதே மாண்புறு செயலாம்; இரும்புத் தொடரையும் எறிந்து செல்லும் ஆடவர் மனமெனும் மத்த யானைஓர் மங்கை இட்ட மயிரிழை அதனுக்கு அடங்கி நின்றிடும்; ஐயமொன்று இல்லை" என்று கூறி இருந்தனன். இதனை ஆமென்று அனைவரும் ஆமோ தித்தனர். அப்பால், அரசர்க் கரசன் அமைச்சரை நோக்கி, "மைந்தனுக் குரிய மங்கையர் மணியினை யாமே தேர்தல் இசைவில தாகும்; காதலன் தன்னிரு கண்களால் கண்டு தேர்ந்து தெளிவதே சீரிய முறையாம்; மங்கைய ராகிய மலர்கள் நிரம்பிய நந்த வனத்தில் நடுவே அவனை நிறுத்தி, "ஐயா! நின்னுளம் விரும்பிய பருவ மலரைப் பறித்துக் கொள்" எனில், அவன், இன்பம் அறியா இளைஞன் ஆதலின், புன்னகை புரிந்து, புதுமலர் ஒன்றும் தீண்டாது அப்பால், சென்றிடில் என்செய்வோம்?" என்று கூறினன். இவ்வுரை கேட்ட | |
|
|