பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு313

Untitled Document
அமைச்சருள் ஒருவன் அறிவில் சிறந்தோன்;
"அம்புவி ஆளும் அரச! கேண்மோ!
தொடுசரம் உடலைத் துளைத்திடும் மட்டுமே
முடங்குளைச் சீயம் முழங்கித் திரியும்;
மங்கையர் அழகிய மதிமுகம் கண்டு
மயங்கா மனிதர்இவ் வையகத்து இல்லை;
உதய குமரியை ஒத்தஓர் கன்னியின்
மைவிழி கண்டு மயங்குவன் நின்மகன்;
ஐயம் இல்லை; ஆதலின் அடியேன்
செப்பும் காரியம் செய்வது நலமாம்.
விரைவில் இங்கொரு விழாக்கொண் டாடுக.
விழாவுக் காகஇவ் வியனக ரத்துள
அழகிய கன்னியர்க்கு அழைப்பு விடுக்க.
அப்பால்,
சாக்கிய நாட்டுத் தனிச்சிறப் புடைய
ஆடல் பாடல் அனைத்திலும் அவர்கள்
கற்ற திறனெலாம் காட்டச் செய்க.
செய்தபின்,
அழகில் இளமையில் ஆடல் பாடலில்
சிறந்தவர் தமக்குச் சிற்சில பரிசுகள்
நின், மைந்தன் கையால் வழங்கிடச் சொல்க,
பரிசுகள் பெறஅவன் பக்கம் வந்துசெல்
அழகி எவளால் அவனது திருமுகம்
வாட்டம் நீங்கி மலர்ச்சி பெறுமோ
அவளே ஐய! நம் அரசிளங் குமரன்
வாழ்க்கைக் குரிய மனைவி யாவாள்.
காதல் கொண்டவன் காதற் கண்ணால்
கண்டு தெரிந்த காரிகை யோடு
வாழ விரும்புதல் வையகத்து இயல்பாம்"
என்று கூறி இருந்தனன். இதுவே
நன்று நன்றென நவின்றனர் யாவரும்
அப்பால்,
"திக்கெலாம் புகழும் திருவோ லக்க