பக்கம் எண் :

328கவிமணியின் கவிதைகள்

Untitled Document
6. புத்தரும் ஏழைச் சிறுவனும்

     (அரண்மனையிலிருந்து வெளிப்பட்டுச் சென்ற புத்தர் வழி நடந்த
களைப்பால் சோர்ந்து கிடந்தார். அவரைக் கண்ட ஓர் இடைச் சிறுவன்,
தான் தாழ்ந்த      குலத்தினனாதல் பற்றி, தன் கலயத்தில் பால் கறந்து
அவருக்குக் கொடுக்க தயங்கினான். பிறப்பினால்     உயர்வு தாழ்வுகள்
பாரட்டலாகாது என்று புத்தர்   அவனுக்குப் போதித்த வரலாறு இதனுள்
கூறப்படுகிறது.)


1526   புண்ணிய மூர்த்தி புத்தமா முனிவன்
உண்மையை உணர்ந்துஇவ் வுலகினில் என்றும்
அழியா இன்பம் அடையும் அவாவினால்
மன்னர் வாழ்வையும் மறுத்தவ னாகித்
தந்தையை மறந்து தனையனைத் துறந்து
மங்கை யசோதரை மதிமுகம் நீத்து
நள்ளிர வதனில் நன்னகர் நீங்கி,
உண்ணும் உணவும் உறக்கமும் இன்றி
இரவும் பகலும் இடைவிடாது எங்கும்
நடந்து மெலிந்து நலிவுற்று ஒருநாள்
வேனில் வெயிலில் வெந்தெரி கானலில்
கைகால் தளர்ந்து கண்களும் மூடி
மூச்சும் அடங்கி முகமும் வெளிறி
உயிரும் உடம்பில் ஊச லாட
விஞ்சிய மயக்கால் வீழ்ந்து கிடந்தனன்
82

வேறு

1527   ஆடுகள் மேய்த்து வரும் - ஒருவன்
ஆயர் குலச்சிறுவன்,
வாடிக் கிடந்தவனைச் - செல்லும்
வழியின் மீது கண்டான்.
83

1528   வையகம் வாழ்ந்திடவே - பிறந்த
மாதவச் செல்வன்முகம்
வெய்யிலில் வெந்திடாமல் - தழைகள்
வெட்டி அருகில் நட்டான்.
84