1529 | | தெய்வ குலத்திவனை - எளியேன் தீண்டலும் ஆகாதினிச் செய்வதும் யாதெனவே - சிறிது சிந்தை தயங்கி நின்றான். | 85 |
1530 | | உள்ளந் தெளிந்துடனே - வெள்ளாடு ஒன்றை அழைத்துவந்து, வள்ளல் மயக்கொழிய - மடுவை வாயில் கறந்துவிட்டான். | 86 |
1531 | | நட்ட தழைகளெல்லாம் - வளர்ந்து நாற்புற மும்கவிந்து, கட்டிய மாளிகைபோல் - வனத்தில் காட்சி யளித்தஅம்மா! | 87 |
1532 | | பூவொடு காய்கனியும் - தளிரும் பொலிந்து நிரம்பியங்கே மேவு பலமணிகள் - இழைத்த விதானமும் ஆனதம்மா! | 88 |
1533 | | ஐயனை இவ்வுலகம் - காணுதற்கு அரியவோர் தெய்வமெனக் கைகள் தொழுதுநின்றனா - சிறுவன் களங்கமிலா வுளத்தான் | 89 |
1534 | | நிலத்திற்கிடந்த ஐயன் - மெல்ல நிமிர்ந்து தலைதூக்கிக் "கலத்தினி லேகொஞ்சம் - பாலைக் கறந்து தருவாய்" என்றான். | 90 |
1535 | | "ஐயையோ! ஆகாது' என்றான் - சிறுவன், அண்ணலே! யானும்உனைக் கையினால் தீண்டவொண்ணா - இடையன்ஓர் காட்டு மனிதன்" என்றான். | 91 |
1536 | | உலகம் புகழ்பெரியோன் - இந்த உரையினைக் கேட்டுஅந்நாள் அலகில் கருணையினால் - சொன்ன அமுத மொழிஇதுவாம்; | 92 |