பக்கம் எண் :

336கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு
1579 தாரணி மன்னவன் பிம்பிசாரன் - யாக
     சாலை நடுவினில் வந்துநின்றான்;
ஆரணம் ஓதிய அந்தணரும் - நிரந்து
     அங்கிரு பக்கமாய்க் கூடிநின்றார்
135
1580 மந்திரம் ஓதி எரிவளர்த்தார் - புகை
     வானை யளாவி எழுந்ததம்மா!
இந்தன மிட்டுப் பெருக்கிநின்றார் - தீயும்
     ஏழுநா விட்டுச் சுழன்றதம்மா!
136
1581 பண்டங்கள் வாரி இறைத்தாரம்மா!
     பானங்கள் அள்ளிச் சொரிந்தாரம்மா!
குண்டம் நிறையநெய் விட்டாரம்மா! - எரி
     கோபுரம் போல உயர்ந்ததம்மா!
137
1582 வேதம் விதித்த விதிமுறையில் - ஒரு
     வெள்ளாடு கண்டு பிடித்துவந்து,
பாதக மான பலியிடவே - அங்கு
     பாரில் கிடத்தி யிருந்தாரம்மா;
138
1583 ஆடுகள் விட்ட உதிரமெல்லாம் - அங்கோர்
     ஆறாக ஓடிப் பரந்ததம்மா!
நாடியவ் வேள்விக் களத்தை விரித்திட
     நாவும் நடுங்கி ஒடுங்கு தம்மா!
139
1584 நீட்டிக் கழுத்தை அறுப்பதற்கோ? - அதன்
     நெஞ்சை வகிர்ந்து பிளப்பதற்கோ?
தீட்டிய கத்தியும், கையுமாக - ஒரு
     தீக்ஷிதர் முன்வந்த நின்றாரம்மா!
140
வேறு
1585 யாகத் திறைவரே! எண்ணருந் தேவரே!
அம்பவி யாளும் அரசர் பெருமான்
பிம்பி சாரப் பெருந்தகை, இந்நாள்
மறைகளில் விதிக்கும் வழிவகை யறிந்து
முறையிற் செய்து முடிக்கும்இம் மகத்தில்