பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு345

Untitled Document
  சுகண சுந்தரி சுஜாதை கேட்டு,
நெஞ்சில் அன்பு நிறைந்தவ ளாகி,
வனத்தில் வந்து, மலர்மழை பொழியும்
மரத்தின் அடியில் வையகம் வாழ
மாதவம் செய்யும் வள்ளலைக் கண்டனள்.
178
வேறு
1623 கண்ணெதிர் காட்சி தந்த
     கடவுளே இவரென்று எண்ணி
மண்ணுற வணங்கிச் செந்தா
     மரைமல ரடிகள் போற்றி,
179
1624 ‘பண்ணியஞ் சிறிது யானும்
     பக்குவம் செய்து வந்தேன்,
அண்ணலே! அருந்தி நீயும்
     அருள்செய வேண்டும்’ என்றாள்.
180
1625 என்றவள் படிகக் கிண்ணம்
     ஏந்திய வாச நீரை
அன்றவள் திருக்க ரங்கள்
     அலம்பிட அளித்து, அப் பாலோர்
181
1626 பொன்தரு கலத்தில் பண்டம்
     பொலிவுறப் பெய்து நின்றாள்;
ஒன்றிய கருணை மூர்த்தி
     உம்பர்நாட் டமுதின் உண்டான்.
182
வேறு
1627 உண்ட அமுதின் உறுகுண மெல்லாம்
ஏழைஎன் நாவால் இயம்புதல் எளிதோ?
இரவும் பகலும் இடைவி டாமல்
ஊணும் உறக்கமும் இன்றி; உரவோன்
தீவர மாகச் செய்த தவத்தால்
வாடி இளைத்து வருந்திய களைப்பெலாம்
கனவு போலக் கழிந்து போயது.
உயிரும் உணவை உண்டது போல