பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு353

Untitled Document
9. புத்தரும் மகனிழந்த தாயும்
     (சிறிது   காலஞ் செல்ல,  சுஜாதையின் மகவு இறந்து விடுகிறது.
அப்போது புத்தர் அவ்வூர் வர அவள் தன் மகவை உயிர்ப்பிக்குமாறு
அவரை    வேண்டுகிறாள். அவர்       அவளுக்கு அறிவுரை கூறி,
‘பிறப்புளதேல்  இறப்புமுண்டு’ என்பதைப் போதித்த வரலாறு இதனுள்
கூறப்படுகிறது).

மண்ணில் வாழ்வுறும் மக்கள் மடிவது
திண்ண மென்றுளந் தேறத் தெளிவுரை
அண்ணல் அன்றோர் அணங்கினுக் கோதிய
புண்ணி யம்பெறு கதை புகலுவாம்
வேறு
1628 முடமான இளமறியை முதுகில் ஏந்தி
மூவுலகும் கருணையினால் வென்ற வீரன்
திடமாகப் பல உயிரும் அளிக்குஞ் சோணைத்
தெய்வநதிக் கரைவந்து சேர்ந்த போது
185
வேறு
1629 மானைப் பழித்த விழியுடையாள் - ஒரு
மாமயில் போலும் நடையுடையாள்;
தேனைப் பழித்த மொழியுடையாள் - பெண்ணின்
தெய்வ மெனத்தகும் சீருடையாள்.
186
1630 ஆறாகக் கண்ணீர் வடித்துநின்றாள் - கையில்
ஆண்மக வொன்றையும் ஏந்திநின்றாள்;
தேறாத உள்ளமும் தேற்றுவிக்கும் - ஞான
தேசிகன் சேவடி போற்றிநின்றாள்.
187
வேறு
1631 சந்திர மதிபோல் நின்ற தையலை நோக்கி ஐயன்
வெந்துயர் விளைந்த தென்னை விளம்புக எனலும்அன்னாள்
நைந்துநொந் துருகி யுள்ளம் நயனத்தின் வழியா யோட
மைந்தனைக் காட்டி இந்த மறுமொழி கூற லுற்றாள்;
188