பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு495

Untitled Document

     உலகமே துக்கமயமாயத்             தோன்றுகிறது. எல்லாவகை
இடையூறுகளையும்நீக்கவல்ல விநாயகர் கடவுளும் இடையூற்றால் நெஞ்சு
கலங்கி வருந்தி நிற்பவர்    போலத் தோன்றுகிறார். அவரும் மருமக்கள்
வழியைச் சார்ந்தவராயிருக்க              வேண்டும்; அதனால் தான்
துன்புறுகிறாரெனச் சுயசரிதையைக்     கூறும் கதாநாயகி நினைக்கிறாள்.
இக்கடவுளின் அருகே நிற்கும் ஒரு சிலரிடத்தும்  துக்கம் தோன்றுகிறது;
ஆனால் மனத்தில் இரக்கமில்லை;     ஏழைப் பெண் புலம்புவதில் ஒரு
மாத்திரை அதிகமென்று         துக்கிக்கிறார்கள். இவர்கள் இலக்கண
வித்துவான்கள்; தாடி       பற்றியெரியும் போது சுருட்டுப் பற்றவைக்க
நெருப்புக் கேட்கிற இனத்தைச்      சார்ந்தவர்கள். இவர்களைத் தனது
சோகங்கலந்த சிரிப்பினால்            ஒதுக்கிவிட்டுத்தனது கதையைத்
தொடங்குகிறாள்.      துன்பத்திற்கும் வறுமைக்கும் தாயகமாயுள்ள ஒரு
குடும்பத்தில் தோன்றினாள்;     அநாதை, பஞ்சகலியாணிப் பிள்ளைக்கு
ஐந்தாவது      மனைவியாய் இவள் வாழ்க்கைப்பட்டாள்; புகுந்தகத்தில்
செல்வமிருந்தது; ஆனால்       துன்பத்துக்கும் குறைவில்லை. அங்கே
அவளுக்குக்  கிடைத்தது புழுக்கை உத்தியோகந்தான்; சக்களத்திகளின்
தலையணை மந்திரோபதேசமெல்லாம்   இவள் தலையில்தான் விடிந்தது.
மாமியின் கொடுங்கோலரசு; இவ்வரசிதாடகைப் பிராட்டியாரின்அவதாரம்;
இவள் திருவிளையாடலெல்லாம்     பத்துப் பரஞ்சோதிகள் பாடினாலும்
முடிவடையாது.

இந்த ஆட்சியின் புது மருமகள்
கஞ்சியோ கூழோ காடி நீரோ
கும்பியாரக் குடித்ததேயில்லை.

     ஒருநாள் தன் மகன் கேலியாகப் பேசத் தொடங்கியது அவனுக்கே
கெடுவினையாக முடிந்தது.    இதனால் விளைந்த துன்பம்; இதுபோன்ற
துன்பங்களிடையில்    நகைப்புநிகழ்ச்சிகள்; தனது கணவன் மனைவியர்
ஐவரோடும் குமரித்தீர்த்தம்            ஆடியது (இது தேவர்களுக்கும்
ஆனந்தமளிக்கும் திருக்காட்சி);    கணவன் தீர்த்த மாடியதன் பயனாக
மீளாவுலகம் புகுந்து மீண்டு வந்தது;  தான் அடைந்த தாங்கவொண்ணாத்
துன்பம்; பின்னர், கணவனது  எச்சிற்சோற்றுக்குச்  சக்களத்திகள் செய்த
சச்சரவு; இவையெல்லாம்    மழையிருளும் மின்னலும் போல மாறிமாறிக்
காட்சியளிக்கின்றன.       காரணவனாகிய தன் கணவனை மருமகனான
அவகாசி பழித்து வைகிறான். இங்கே,

ஆரைக் கேட்டுநீர் ஐந்து கலியாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர் ஐயா?
பட்டப் பெயரும் பஞ்ச கலியாணிப்
பிள்ளை யென்றுநீர் பெற்று விட்டீரே