Untitled Document
என்று மருமகன் கூறுவது நகைச்சுவையின் பேரெல்லையைத் தொட்டு விடுகிறது. மருமகனுக்கு விடையாகக் காரணவன் தனது ஸ்தானத்தின் கௌரவமும் குடும்பத்தின் பெருமையுந் தோன்றச் சொல்லும் சொற்கள் மிகவும் சுவைபொருந்தியவை. ஆலடிமாடன் கொடை, அதில் காரணவன் ‘கணிசமாக’ அலங்கார உடைதரித்து ஆடுதல், இழவு ‘அடியந்திரம்’, கோயில்களில் குடும்ப கௌரவத்திற்காக ஏற்படுத்தும்கட்டளைகள்,சானல் வாச்சர் (Channel Watcher) சந்தனத் தேவருக்கு ‘அட்ரஸ்’ கொடுத்தல், மருமகன் ஏழு வருஷமாய் இங்கீலிஷ் படித்து ஏ.பி.ஸி.டி. எழுதத் தெரியாமலிருத்தல், மருமகன் ராஜா திருவிளையாடல்கள் இவைகளெல்லாம் நினைக்குந்தோறும் நம்மை விலாவொடியச் சிரிக்கச் செய்கின்றன. மருமகனது தந்தை வீரபத்திர பிள்ளை வந்து அவன் மகனுக்காச் சண்டையிட்டு
வைய வைய வைரக்கல்லும் திட்டத் திட்டத் திண்டுக்கல்லும் | ஆகத் தன் கணவர் இருந்த காட்சி பார்ப்போருக்கு நகைப்புக்கிடமாகவும் அவளுக்கு ஆற்றொணாத் துயரத்துக்கு இடமாகவும் உள்ளது. பின் குடும்பச் சண்டை முற்றிக் கோர்ட்டுச் சண்டையாகமாறிவிடுகிறது.முதலில் இருந்த வீறாப்புக்கள் வரவரக் குறைகின்றன. குடும்பச் சொத்துக் கரைந்துபோய் விடுகிறது. காரணவருக்குத் தேகவலிமை குன்றிவிடுகிறது; கவலையும் நோயும் பீடிக்கின்றன. முடிவில், படிப் படியாய் இப்படிஅவர் பாடு குறைந்து குறைந்து கொண்டே வந்தது; அண்டை வீடாகி, அறைப்புரை யாகி படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார். எழுந்து நடக்க இயலா தானார் நடந்தவர் கீழே கிடந்தார், அம்மா! | நோயும் பாயுமாய்க் கிடந்த இக்காரணவருக்கு இரண்டு மனைவியர்களே கடைசி காலத்தில் உதவியவர்கள். கடைசிக் காலமும் அமைதியாய்கழிந்த பாடில்லை. அவரது தங்கையும் மருமகனும் இருக்கிற பொருள்களைக் காவல் செய்துவைப்பதற்கு வந்து சேர்ந்தார்கள். மருமகனிடத்தில் நல்ல வார்த்தை சொல்லித் தன் மனைவி மக்களைப் காப்பாற்றும்படி சொல்லுகிறார். தங்கை இதைக் கண்டு மிகவும் கோபித்து வைப்புத் திட்டங்களெல்லாம் பூட்டி முத்திரையிடச் செய்கிறாள். கதையைச் சொல்லிவரும் ஐந்தாம் மனைவி. | |
|
|