முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 497 |
Untitled Document
கணவர்க்கு அந்திய காலம் தண்ணீர் குடிக்கும் பாத்திரம் குடுக்கை ஆனதும் பரந்த சட்டி படிக்கம் ஆனதும் பாலும் அன்னப் பாலே ஆனதும். | எண்ணி எண்ணி நெஞ்சம் குமுறுகிறாள். எல்லாவற்றிலும் மேலாகத் தன் கணவனது அந்திய நிலையில் அவரது ஆத்மசாந்திக்குத்திருவாசகம் படிக்கத் தன் மகனைச் சொன்னபோது அவன் தன்னால் முடியாதென்று தமிழை இகழ்ந்து சொன்னது இப்பெண்மணியின் நெஞ்சைப் பிளந்து விட்டது. கணவரின் முடிவு வந்தது; ஏங்கி அழுத எங்களை நோக்கினர்; வாடி அழுத மக்களை நோக்கினர்; கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்; கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர். | கதாநாயகியின் துக்கம் நிரம்பிவிட்டது. அவள் கண்களிலும் இதயத்திலும் உதிரங் கொட்டுகிறது; அவள் வயிறுஎரிகிறது. அனற்பிழம்புபெருக்கெடுத் தோடுவது போலஅவள் சொற்கள் புறப்படுகின்றன; மருமக்கள் வழி,
மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி; ........ | நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி; வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி; இருள்வழி, செல்பவர் இடறும் கல்வழி; ........ | அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று அவ்வை சொல்வழி அறியா மடவழி, ஐயோ, இவ்வழி ஆகாது, ஆகாது; ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி மனிதர் செல்லும் வழியாயிடுமோ? ........ | கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ! வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும் அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ! நீதியும் உளதோ! நீதியும் உளதோ! மாதர் கண்ணீர் மாறா நிலத்தில ........ | | |
|
|