பக்கம் எண் :

498கவிமணியின் கவிதைகள்

Untitled Document


நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில்
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும்இந் நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
என்று கதறி ஓலமிடுகிறாள் நமது கதாநாயகி.

IV

     இப்புதிய கண்ணகியின்          ஓலம் வீணாகிப் போய் விடுமா?
நாஞ்சினாட்டுப் பெருமக்கள் காதைத் துளைத்துவிட்டது. அவர்கள்இதயக்
கோட்டையைத்          தாக்கித் தகர்த்துவிட்டது. அவர்கள் குடும்பம்
மேன்மையடைவதற்குரிய சீர்திருத்த மசோதா கொல்லம் ஆண்டு 1101-ல்
(1926) சட்ட சபையில்     நிறைவேறி 1102-ல் (1927) அமுலுக்கு வந்தது.
இம்மான்மியமே சீர்திருத்தத்திற்குக் காரணமாயிருந்தது.

     இம்மான்மியம்    திருவனந்தபுரத்திலிருந்து பிரசுரிக்கப்பட்டு வந்த
‘தமிழன்’ என்ற பத்திரிகையில் 1917-ம் வருஷம் மார்ச்சுமாதம்தொடங்கிப்
பகுதி பகுதியாக வெளிவந்து     கொண்டிருந்தது. 1918 பெப்ரவரியோடு
முற்றுப் பெற்றது.அக்காலத்தில்அப்பத்திரிகையின்ஆசிரியராயிருந்தவர்கள்
பண்டித எஸ்.முத்துசாமிப்  பிள்ளையர்களும் திருவனந்தபுரம் மஹாராஜா
கல்லூரி மலையாளப் பேராசிரியர் சி.என்.ஏ.அனந்தராமையசாஸ்திரிகளும்
ஆவார்கள்.

     பத்திரிகையில் ஆசிரியர் பெயரோடு மான்மியம் வெளிவரவில்லை.
பழைய ஏட்டுச்சுவடியில்           இருந்த நூலை அச்சிற்பதிப்பிக்கிற
பாவனையிலே         வெளியாகிக் கொண்டிருந்தது. ஆசிரியர் பெயர்
காணப்பெறாவிட்டாலும், பழைய நூல் என்ற தோற்றத்தோடு பிரசுரமாகிய
போதிலும், இத்தோற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு நூலிற்சிற்சில வரிகளும் சொற்களும் பொடிந்து      போயின என்று குறிப்பிட்டிருந்த போதிலும்,
எழுதியவர்கள் இன்னார்தாமென்பதுபலருக்கும்தெரிந்தஇரகசியமாகத்தான்
இருந்தது. ஒவ்வொரு பகுதியும் வெளிவர வெளிவர, தமிழ்மக்கள்அதனை
ஆவலாய் வாங்கிப் படித்து வந்தார்கள். இலக்கியச் சுவையிலே ஈடுபட்ட
ஸ்ரீ கே.ஜி. சேஷையர் முதலானவர்கள் இந்நூலின் பெருமையைப் பலரும் அறியச் செய்து வந்தார்கள்.      நாஞ்சினாட்டு வேளாள இளைஞர்கள்
இதனை வாசித்து உள்ளங் கொதித்தார்கள்.   அவர்களில் முதியோர்கள்
இதனை வாசித்த அளவில் இதிலே பொதிந்து