முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 499 |
Untitled Document
கிடக்கும் உண்மையையும், சீர்திருத்தத்தின் அவசியத்தையும் உணர்ந்தார்கள். அந்நாட்டு ஆண்களும் பெண்களும் நூலிலுள்ள நகைச்சுவையில் ஈடுபட்டு உளத்தாற் சிரித்து மகிழ்ந்தார்கள். தமிழிலே ஒரு நூதன இலக்கியம் தோன்றி விட்டது.
மான்மியம் ஒரு சமுதாயத்தின் சீர்திருத்தத்தை விளைத்தது. அப்படியே தமிழ் நடையிலும் கவிஞர் சமுதாயத்திலும்சீர்திருத்தத்தைஇது விளைவிக்க வல்லது என்பதைத் தமிழ் அறிஞர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். சென்னை ஸர்வகலாசாலை எஸ்.வையாபுரிப் பிள்ளை, 20-11-1942 தமிழராய்ச்சித்துறைத்தலைவர் | |
|
|