பக்கம் எண் :

500கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பின்னிணைப்பு எண் - 4
1. நாஞ்சில் நாட்டு வேளாள சகோதரர்களுக்கு ஒரு கோட்டை வினாக்கள்

குறிப்பு : ஒவ்வொருவரும்       கேள்விகளுக்கு விடை கண்டு மனச்
சாக்ஷியைத் திருப்தி செய்து கொண்டால் போதுமானது.

1. ஓர் உத்தமமான மருமக்கள்  வழிக் குடும்பத்தின் லக்ஷணங்கள் என்ன? நாஞ்சில் நாட்டில்        எக்காலத்திலாவது அவ்வித
குடும்பங்கள் ஏற்பட்டிருந்ததுண்டா?
2 குடும்பங்களின் நிலைமை      முற்காலத்தில் எப்படியிருந்தது? தற்காலத்தில் எப்படியிருக்கிறது?         பல குடும்பங்களின் சரித்திரங்களையும் ஆராய்ந்து விடை நிதானிக்க.
3 நாஞ்சில் நாட்டு வேளாளர் - மருமக்கள் வழிக்குடும்பத்திற்கும் நாயர் - குடும்பத்திற்கும் வித்தியாஸம் உண்டா?
4 நாஞ்சில் நாட்டார் ஆதிக்காலந்  தொட்டே மருமக்கள் வழியை அனுசரித்து வருகிறார்களா, அல்லது இடைக்காலத்தில் அதைக்
கைக் கொண்டிருப்பவர்களா? சரித்திர   ஆதாரத்துடன் விடை
காண்க.
5 தம் தரவாட்டு க்ஷேமமொன்றையே முக்கிய ஜீவித நோக்கமாகக் கொண்டு உழைத்துவரும் காரணவர்கள்  இப்பொழுது நாஞ்சில்
நாட்டில் எத்தனை பேர் இருக்கக்கூடும்?
6 பொதுவான ஒரு காரணவன்     இறக்கும் போது குடும்பத்தின் செல்வ நிலை எப்படியிருக்கிறது?      அவன் குடும்ப பரணம் கையேற்ற காலத்தில் இருந்ததைவிட விருத்தியடைந்திருக்கிறதா? அல்லது மோசமாயிருக்கிறதா? காரணம் என்ன?
7 தகப்பனால் முன்வந்திருக்கும்      மக்கள் அதிகமா? அல்லது காரணவனால் முன் வந்திருக்கும்       மருமக்கள் அதிகமா?
ஒவ்வொன்றிலும் நூற்றுக்கு எத்தனை வரும்?
8 நாஞ்சில் நாட்டில்        பெரும்பாலரும் தகப்பனுடைய ஊரில்
வீடுங்குடியுமாயிருக்கிறார்களா     அல்லது தங்கள் காரணவன்
குடும்ப வீட்டில் இருக்கிறார்களா?