9. | குடும்ப முதலைக் கறம்பி மக்களுக்குக் கொடுக்கும் காரணவர்களின் தொகை அதிகமா? அவ்வாறு கொடுக்காதவர்களின் தொகை அதிகமா? |
10 | வியவகார மில்லாத குடும்பங்கள் நூற்றுக்கு எத்தனை வரும்? |
11 | காரணவனும் அநந்திரவர்களும் ரம்மியமாக இருக்கிற குடும்பங்கள் ஏதாவது இருக்கிறதா? |
12 | நாளுக்குநாள் பாகப்பிரமாணங்கள் அதிகப்பட்டுக்கொண்டு வருகிறதா? அல்லது குறைந்து கொண்டு வருகிறதா? |
13 | நூறு வருஷத்திற்கு இப்புறம் பாகமாகாத குடும்பங்கள் எத்தனை வரும்? |
14 | ஒருவனுக்கு மனைவி மக்கள் மீது அன்பு அதிக மாயிருக்குமா? அல்லது மருமக்கள்மீது அன்பு அதிகமாயிருக்குமா? |
15 | குடும்பத்தைப் பொறுத்துள்ள காரணவனது கடமைக்கும் அவனுக்கு இயற்கையாக மக்கள் மீது அமைந்துள்ளஅன்பிற்கும் போராட்ட மேற்படுமாயின், ஜெயிப்பது பெரும்பாலும் எதுவாயிருக்கக்கூடும்? அன்பா? கடமையா? |
16 | காரணவனொழிந்த மற்றப் பேர்கள் சம்பாதிக்கும் பொருளைக் குடும்பப் பொது முதலோடு சேர்ப்பது உண்டா? சேர்ப்பதில்லையாயின் காரணமென்ன? |
17 | பொதுவாக நமது முன்னேற்றத்திற்கு மருமக்கள் வழி அனுகூலமாயிருக்கிறதா? பிரதி கூலமாயிருக்கிறதா? |
18 | ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியத்தால் தெளிவாகுந் தோஷங்கள் உண்மையானவைகளா? அல்லவா? அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டுவது அவசியமல்லவா? |
19 | உள்ளெல்லாம் அழுகிக் கொழுகொழுத்த முழுப்பூசணிக்காயா அல்லது அழுகாத நல்லகாயின் ஒரு துண்டா நமக்குப் பிரயோஜனமாவது? |
20 | பக்கக்கன்றுகள் தாய்வாழையைச் சுற்றி ஒன்றாக நின்றால் நன்றாய்க் குலைத்துப் பயன் தருமா? அல்லது அவற்றைத் தனித் தனியாயெடுத்து வைத்துப் பாதுகாத்தால் அவ்வாறு பயன்தருமா? நாற்று நடுவதில் முதலைக் குறைத்து வைத்து நடவேண்டும் என்பதன் கருதபுது என்ன? |