பக்கம் எண் :

502கவிமணியின் கவிதைகள்

Untitled Document
21. ஒரு பழைய வீடு; கூரை      பிரிந்து கிடக்கிறது; சுவர் மலந்து
நிற்கிறது; தளம் அவையான்   அறுத்துப் பொந்தும் புடையுமாக
இருக்கிறது; தேள், நட்டுவக்காலி, பாம்பு முதலிய விஷ ஐந்துகள்
குடும்பத்தோடு   குடியேறியிருக்கின்றன; இந்த வீட்டைப் பழுது
பார்த்து முட்டுத் தட்டுகள் கொடுத்து நாம்     வாசம் செய்தல்
நல்லதா? அல்லது அடியோடே மாற்றிவிட்டு, காலரீதிக்குஏற்றபடி
வீடு கட்டி வாசம் செய்தல் நல்லதா?

குறிப்புகள் : -    

     ஒரு கோட்டை என்பது 21 மரக்கால் கொண்ட முகத்தலளவை. 21
கேள்விகள் உடையதால் இது ஒரு கோட்டை வினாக்கள் எனப்பட்டது.

     இத்துண்டு பிரசுரத்தை 1909 - அளவில் கவிமணிவெளியிட்டிருக்க
வேண்டும். இப்பிரசுரம் நாஞ்சில் நாட்டு வேளாளர் வாழ்ந்தகிராமங்களில்
வினியோகிக்கப்பட்ட போது        ஆதரவாகவும், எதிராகவும் மக்கள்
திரண்டிருக்கின்றனர்.