பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு503

Untitled Document
பின்னிணைப்பு எண் - 5
மருமக்கள்வழி மான்மியம்
(அடிக்குறிப்புகள்)
விநாயகர் வணக்கம்
     2-3 இவ்வடிகளுக்கு இரண்டு வகையாகப்பொருள் கொள்ளலாம்.
விநாயகனே உன்னிடம்      அன்புடையவர் படைத்தவற்றை, வாரி
உண்பதற்கு வசதியாக யானையின் தும்பிக்கையை ஏந்தினாய் என்பது
ஒரு பொருள். உன்னிடம்   அன்பை உடையவர்கள் வேண்டியதைக்
கொடுப்பதற்கு நீண்ட கரத்தைப்       பெற்றிருக்கின்றாய் என்பது
இன்னொரு பொருள்.
8 அம்பலம்       பலர் கூடும் வெளியிடம்
10 குனிப்பான்      நடனமாடுவான்
16 பணா முடி      பாம்பின் பட முடி
அரவணை      பாம்புப்படுக்கை
19-20 சக்கரம்        திருமாலின் கையில் உள்ளசக்கராயுதம்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்1950 வரை வழக்கில் இருந்த நாணயம்.
28 1/2 சக்கரம் ஒரு       பிரிட்டீஷ் ரூபாய் அல்லது 28 சக்கரம்1
திருவிதாங்கூர் ரூபாய்
24   சந்தி-நான்கு தெருக்கள் கூடும் இடம்
26   இருவழி - விநாயகன், மாமன்(திருமால்)வீட்டிலும்,தந்தை(சிவன்)
வீட்டிலும் இடமின்றி சந்தியில்அமர்ந்திருப்பதைப்போல,மருமக்கள்வழிக்
குழந்தைகளும் உள்ளனர் என்பதைக் குறிப்பது.
அவையடக்கம்
புல்வாய்        கலைமான்
45 தமியர்         தனியர்
போதம்        சுயஅறிவு
50 விகாரம        முறைகேடு
56 பஞ்சப்பாட்டு    தனது ஏழ்மையை ஓயாமல் கூறும்கூற்று.
57 இலக்கண
வழுஉக்கள்      இலக்கணப் பிழைகள்