பக்கம் எண் :

504கவிமணியின் கவிதைகள்

Untitled Document
குலமுறை கிளத்துப் படலம்
74-75     காசினி - உலகம்
75-76  நாஞ்சில் நாட்டில்   வழக்கில் இருந்த ஒப்பாரிப் பாடலின் வேறு
வடிவமாக இவ்வரிகள் உள்ளன. அவை
பாஞ்சாலி கதையொன்று
பாரதத்தில் கேட்டதுண்டு
பாடும் எனக்காச்சு
பாஞ்சாலி நானானேன்
தீயும் தெகரமும்
தெரௌபதெக் கென்றிருந்தேன்
தீயும் எனக்காச்சி
தெரௌபதையும் நானானேன்
80 பதும நாபன் - திருவனந்தபுரத்தில் குடிகொண்டுள்ள பத்மநாபன் என்னும் இறைவன்
81-82 திருமூலமன்னர் (1886-1924) திருவிதாங்கூரின் பத்தாவது அரசர்.
82-83 வஞ்சிநாடு - திருவிதாங்கூர்
84 தொல்லூர்நல்லூர் - பழமையான இவ்வூர் நாகர்கோவிலிருந்து
கன்னியாகுமரி செல்லும் சாலையில் உள்ளசுசீந்திரத்தைஅடுத்து
இருப்பது.
85 மேழிச் செல்வம் - ஏரால் வரும்   செல்வம்; வேளாண் தொழில
91 தடி - சிறியவயல்

ஓரணை ஏர் - ஒரு ஜோடிக்       காளையும் ஏரும். இதே சொல்லைக்
கல்வெட்டுக்களும் கையாளுகின்றன.

92 ஆஸ்தி - சொத்து

94 ஒரு கழிநூல் - மிக நீண்ட   வரலாறு; கழி - மிகுந்த; ஒரு கழி நூல் ஒரு குறிப்பிட்ட   நீள அளவு நூல் சுருளாக சுற்றிவைக்கப் பட்டிருக்கும் -   நூலைப் பிரிக்கப் பிரிக்க வளர்ந்து கொண்டே
இருப்பது போல் கதையும்சொல்லச் சொல்ல வளர்ந்து கொண்டே இருக்கும்

97 தாழையம்பதி - கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைவட்டத்தில் உள்ள ஒரு ஊர்; பேச்சுவழக்கில்     ‘தாழக்குடி’ ‘தாழைக்குடி’,
எனப்படும். நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.