98 | கணவன் பெயரை மனைவி சொல்லுதல் கூடாது என்பது மரபு. |
103 | தொழுத்துச் சாணம் - மாட்டுக் கொட்டிலில் உள்ள சாணம் |
104 | தொட்டித்தண்ணி - மாட்டுக் கொட்டிலில் மாடுகள் குடிக்க வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் உள்ள தண்ணீர் |
105 | அடுக்களை - சமையல் அறை |
112 | பெருமாப்பிள்ளை - மூத்த மனைவியின் பெயர் |
113 | ஏகாங்கி - குழந்தையில்லாமல் தனியே இருப்பவள் |
114 | உரிய - உரி; அரை நாழி அளவு |
115 | உழக்கு - கால்படி |
| கஞ்சி - அரிசிச்சோறு கலந்த நீராகாரம்; குறுநொய் - அரிசியின் சிறு நொய் |
116 | மகராசிகள் - எல்லாச் சிறப்பும் பெற்றவர்கள் |
122 | அழுபிள்ளைக்காரி - எப்போதும் அழுது கொண்டிருக்கும் பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டிருப்பவள் |
123 | அடம் - பிடிவாதம் |
130 | முழுகவுமில்லை - கர்ப்பமாயிருப்பதைக் குறிக்கும் பேச்சுவழக்கு சொல் |
131 | வயாக்கோட்டி - மசக்கை (யாக்கோயொட்டி) |
133 | எடுப்புக் காரி - கர்வமுடையவள் |
140-143 | இது ஒரு நாட்டுப்புறப்பாடலின் ஒரு பகுதி; இந்தநாலுவரிப்பாடல் மு.வை.அரவிந்தன் தொகுத்த நாட்டார் பாடல்கள் என்னும்நூலில் (பாரி நிலையம், சென்னை 1956 ப.65) உள்ளது. இதன் தொகுப்பாசிரியர் இதைத் தொகுத்த இடம் பற்றிக் கூறவில்லை. |
146 | அரக்குப்பாவை - மெழுகுப் பொம்மை; அடுக்களை அடுப்பு நெருப்பின் அருகில் நின்றால் உருகி விடுவாள் என்பது கிண்டலாகக் குறிப்பிடப்படுகிறது. |
147 | கரிக்கலம் - கரிபட்ட பாத்திரம் |
151 | தலையணை மந்திரம் - படுக்கையறையில் கணவனுக்கு, மனைவி இரகசியமாய்ச் சொல்லும் கோள். |
153 | ஒவ்வொரு காலம் - சிறப்பு நிகழ்ச்சிகள் வீட்டில் வரும் காலத்தில். |