| மாமி அரசியல் படலம் |
157 | அரங்கு - வீட்டின் உள் அறை; வீட்டில் முக்கியமான பொருட்கள் வைக்கப்படும் இடம். |
| அறைப்புரை - வீட்டின் முன்புறம் அமைந்த தனியான அறை; தட்டு - மாடி |
| சாய்ப்பு - சாய்வான கூரை உடைய சிறிய அறை; இது வீட்டின் இடதுபுறம் இருக்கும். |
160 | கொல்லமிளகு - மிளகாய் வகை; நல்லபழுத்து காய்ந்த வற்றல் மிளகு |
162 | உப்பில் புளியை உருட்டுதல் - உப்பும், புளியும் தனித்தனியாக இருந்தால் மருமகள் அவற்றை விலைக்குக் கொடுத்துவிடுவாள் என்பதால் மாமியார் இப்படிச் செய்கிறாள். |
170 | காடிநீர் - கஞ்சித்தண்ணீர்; பழைய சோற்றில் உள்ள நீர் |
171 | கும்பி - வயிறு |
173 | கண்டாங்கி சாயப்புடவை. |
175-186 | இங்கு குறிப்பிடப்படும் இந்த வரிகள் திருவானந்தம் பிள்ளையின் ‘இராமகீர்த்தனம்’ என்னும் கதைப்பாடலின் செல்வாக்கால் உருவானவை எனக் கூறமுடியும். தாடகையின் கொடுமையைக் குறிக்கும் இடத்தில் இப்பகுதி வருகிறது. |
| பெருத்த மலைபோல் வருவாள் பெரும்பாவி தாடகை தான் இந்திரன் ஆயிரம் கண்ணை எளிதினிலே பெற்றவள்தான் அங்கும் இங்கும் எங்கும் ஆகவே எறும்பும் காணா இடத்தில் போவாள் புகையும் நுழையா இடத்தில் நுழைவாள் அரக்கி இவளும் ஆணாய் பிறந்தால் அகிலம் ஆள்வாள் |
189-189 | மாமியார் இறந்து விட்டதைக், கதை கூறும் பெண் இப்படிக் கூறுகிறாள், |