190 | உழக்கு - கால்படி |
191 | நாழி - இரண்டு உழக்கு |
192-93 | மதுரை சோமசுந்தரக் கடவுள் திருவிளையாடல் கதை நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது. |
198 | திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் |
203-206 | இங்கு, குறிப்பிடப்பட்ட வரிகளில் முத்தராம்மன் கதையின் பாதிப்பைக் காணலாம். முத்தாரம்மன் என்னும் நாட்டார் தெய்வத்திக்குரிய வில்லிசைக் கதைப்பாடலின் நடுப்பகுதியில் நாககன்னி கதை வருகிறது. இக்கதையில் மூத்தவளானநாககன்னி இளையவள் தெய்வகன்னியைத் துன்புறுத்துவதாக ஒரு நிகழ்ச்சி உள்ளது. இதை இக்கதைப்பாடல் |
| சடைத்ததென்று இருக்கவெட்டாள் தலைமுடியைக் கோதவெட்டாள் வடிப்பமுடன் பழக்கமிட மறுவீட்டில் போகவெட்டாள் வெற்றிலையைத் தின்ன வொட்டாள் வேர்த்தாலும் குளிக்கவொட்டாள் நிறைய அன்னம் உண்ண வொட்டாள் குனியவொட்டாள் நிமிர வொட்டாள் |
| என்கிறது. (ஆறுமுகப் பெருமாள் நாடார் (ப.ஆ.) முத்தாரம்மன் விற்கவிதை, நாகர்கோவில் 1978 ப.62) |
207 | மதினி - அண்ணி |
208 | சடைவாறுதற்கு - ஓய்வெடுப்பதற்கு |
212 | சம்மந்தி - துவையல் வகை |
| கேலிப்படலம் |
219 | குலுக்கை - நெல் போட உதவும் குதிர் |
221 | பனந்தூர் - பனைமரத்தின் அடிப்பகுதி |
| பாறி - இளைத்து |
225 | குதில் - குதிர் |
226 | பத்தயம் - தானியம் முதலியன இட்டுவைக்கும் மரத்தாலான களஞ்சியம் |