பக்கம் எண் :

508கவிமணியின் கவிதைகள்

Untitled Document
225-26 குதில், பந்தயம்   முதலியவற்றில் உள்ள நெல் எல்லாம் தீர்ந்து
விட்டது. இவர்கள் வந்து     நீண்ட நாள் இருந்ததால் இப்படி
ஆனது என்ற செய்தி குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
228 இந்த ஆடி முழுதும் இங்கிருந்து - ஆடி மாதத்தில் மருமக்கள், மாமன்மார்களின் வீட்டில் விருந்தினராகத் தங்கும் வழக்கத்தைக் குறிப்பது.
231-32 “தின்றவன் தின்றான்; திருக்கணங்குடியான் தெண்டம்இறுப்பான்” என்பது பழமொழி. செலவு செய்பவன் ஒருவன் அதனால்சுகமும்
அனுபவமும் பெறுபவன் இன்னொருவன் என்பது இதன்பொருள்.
திருக்கணம் குடி - திருக்குறும்குடி;     திருநெல்வேலிமாவட்டம்
வள்ளியூரை அடுத்து    8 கி.மீ. தொலைவில் உள்ள வைணவத்
தலம். தெண்டம் - வரி; இறுப்பான் - கொடுப்பான்
233-38 கூட்டு - குழம்பு வகைகள்

அவியல் எல்லாக் காய்கறிகளும் போட்டு அவித்துச் செய்யப்படும் கூட்டு
துவையல் தேங்காய், வற்றல் சேர்த்து அரைத்து செய்யப்படுவது,
தொகையல்
தீயல் தேங்காய்த் திருவலை வறுத்து அரைத்துச் செய்யப்படும் குழம்பு
பச்சடி புளி சேர்ந்த கூட்டுவகை
தொவரன் அவரை அல்லது வெண்டைக்காயில் தேங்காய் அரைத்துச் செய்யப்படும் பொரியல் வகை
புளிசேரி - தயிர்க்குழம்பு
ஏத்தன் - ஒருவகை வாழைக்காய் (நேந்திரன் காய்)
எரிசேரி - சேனைக்கிழங்கு, ஏத்தன் வாழைக்காய் இரண்டுமோ, தனித்தனியோ, சேர்த்த கூட்டு.
பப்படம் - அப்பளம்
பிரதமன் - பாயசவகை, சிறுபயற்றுப் பாயசம்
238 படைப்பு - நாட்டார் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் உணவு; சாதத்துடன் பலவகைக் கறி குழம்புகளைப் படைத்தல்.
239 ஏலும் - இயலும்