243 | கைச்சீட்டு - கையால் எழுதிய குறிப்புச் சீட்டு |
244 | ஒற்றி கொடுத்தல் - சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் அடைமானம் வைத்தல் |
245 | ஐயா - அப்பா |
254 | உடையக்காரியை - உன் தந்தையின் சொத்துக்கு உரிமையுடையவளை தடைவையோ - தடை செய்வாயோ |
255 | பத்திரமாய் - மரியாதையாக இரு பழைய காடு - ஊருக்கு புறத்தே; வேளாளர் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட புழுக்க வேளாளர்வாழும் காட்டுப் பகுதி; நாஞ்சில் நாட்டுக்கு வெளியே |
260 | கண்ணில் மிளகு இடுதல் - கண்ணில் பச்சை மிளகாயைத் தேய்த்தல் என்பது கொடிய தண்டனைகளில் ஒன்று. |
| கடலாடு படலம் |
270-272 | கன்னியாகுமரிக் கடலில் ஆடிமாத அமாவாசையில் நீத்தாருக்குப் பிண்டங் கொடுத்தலும், நீராடலும் இன்றும் வழக்கில் உள்ளது. |
275 | தர்ப்பணக் கடன் - தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன். |
280-81 | கடலில் நீராடும் போது மனைவி அல்லது புதல்வரின் கையைப் பிடித்து நீராட வேண்டும் என்பது வழக்கு அங்கை - உள்ளங்கை |
282-84 | பன்னிருகரத்துப் பரமன் - முருகன் இருபது கரத்து இராக்கதன் - இராவணன் ஆயிரங்கரத்து அண்ணல் - வாணாசுரன் |
295 | ஏட்டைத் திருப்பி - மருத்துவ ஏட்டைத் திருப்பிப் பார்த்து |
298 | மிஷியன் தெரசர் - லண்டன் மிஷன் மருத்துவர் |
| தெரசர் - Dresser; டாக்டருக்கு உதவியாகப் புண்களைக் கட்டுபவர் |
306 | சூரணம் - சூர்ணப் பொடி |
307 | தொந்தரை - தொந்தரவு |
309 | பணம், காசு என்பன திருவிதாங்கூர் சமஸ்தானத்து நாணயங்கள் |