Untitled Document | | 46. காலைப் பாட்டு | 319 | | அருணன் உதித்தனன்; அம்புஜம் விண்டது; அளிகளும் மொய்த்தன; பாராய்! அம்மா! நீ எழுந்தோடி வாராய்! |
320 | | பசிய புல் நுனியில் பதித்தவெண் முத்தமோ? பனித்துளி தானோ? நீ பாராய்? பைங்கிளி! எழுந்தோடி வாராய்! |
321 | | பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று; பூஞ்செடி பொலிவதைப் பாராய்! பொன்னே! நீ எழுந்தோடி வாராய்! |
322 | | காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று; கனியுதிர் காவினைப் பாராய்! கண்ணே! நீ எழுந்தோடி வாராய்! |
| | 47. காக்காய் | 323 | | காக்காய்! காக்காய்! பறந்து வா; கண்ணுக்கு மை கொண்டு வா. | 324 | | கோழீ! கோழீ! கூவி வா; குழந்தைக்குப் பூக் கொண்டு வா; | 325 | | வெள்ளைப் பசுவே! விரைந்து வா; பிள்ளைக்குப் பால் கொண்டு வா. |
| | 48. கோழி | 326 | | கோழீ! கோழீ! வா வா! கொக்கோ கோ என்று வா; கோழீ! ஓடி வா வா; கொண்டைப் பூவைக் காட்டு வா. |
327 | | குத்திச் சண்டை செய்யவோ? குப்பை கிண்டி மேயவோ? கத்தி போலுன் கால்விரல் கடவுள் தந்துவிட்டனர்! | |
|
|