முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 51 |
Untitled Document
328 | | காலை கூவி எங்களைக் கட்டில் விட்டெ ழுப்புவாய்; வேலை செய்ய ஏவுவாய்! வெற்றி கொண்டகோழியே! |
329 | | கோழீ! கோழீ! வா வா; கூரை விட் டிறங்கி வா; கோழீ! முட்டை இட வா; கூட்டில் அடை காக்க வா. |
330 | | பெட்டைக் கோழீ! வா வா; பிள்ளைகளைக் கூட்டி வா; குட்டை நெல்லைக் கொட்டினேன்; கொத்திக் கொத்தித் தின்ன வா. |
331 | | வஞ்சமாயப் பருந்ததோ வானில் வட்டம் போடுது, குஞ்ச ணைத்துக் காப்பாயோ? கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ? |
332 | | வீட்டு வாசல் காப்பவன் வேட்டை யாட வல்லவன், ஆட்டுக் கிடைப் பாண்டியன், அன்பு மிக்க தோழன். |
333 | | உண்ட சோற்றை எண்ணி உயிரும் விடத் துணிபவன், மண்டலத்தில் நாய்போல் வாய்த்த துணை உண்டோ? |
334 | | தேமலர்ச் சோலையிலே - வாசமெழு தென்றல் உலாவையிலே, மாமண மங்கையைப்போல் - பெரிது மகிழ்ந்துநீ தங்கினையோ? | |
|
|